For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நடராஜனுக்கு நோ சான்ஸ்.. இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2 டெஸ்ட் போட்டி.. 18 பேர் கொண்ட அணி அறிவிப்பு

சென்னை: இங்கிலாந்திற்கு எதிராக நடைப்பெற உள்ள கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடந்த மிகப்பெரிய கிரிக்கெட் தொடரை இந்தியா வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்த நிலையில் டெஸ்ட் தொடரையும், டி 20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது.

இந்த நிலையில் அடுத்த மாதம் இந்தியா இங்கிலாந்து இடையே கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகள் என்ற மிக நீண்ட தொடர் இந்தியாவில் நடக்க உள்ளது.

உங்க கோட்டைக்கு வர சொன்னியாமே?.. தமிழக வீரர் அஸ்வின் செய்த வித்தியாசமான டிவிட்.. நெத்தியடி பதிலடி!உங்க கோட்டைக்கு வர சொன்னியாமே?.. தமிழக வீரர் அஸ்வின் செய்த வித்தியாசமான டிவிட்.. நெத்தியடி பதிலடி!

சென்னை

சென்னை

இங்கிலாந்திற்கு எதிராக நடைப்பெற உள்ள கிரிக்கெட் தொடரில் இரண்டு முக்கியமான போட்டிகள் சென்னையில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் பிப்ரவரி 5ம் தேதி நடக்கும். இரண்டாவது டெஸ்ட் போட்டியும் சென்னையில் 13ம் தேதி நடக்க உள்ளது.

டெஸ்ட் போட்டிகள்

டெஸ்ட் போட்டிகள்

3வது டெஸ்ட் போட்டி 24ம் தேதி பிப்ரவரி மாதம் நடக்க அஹமதாபாத்தில் உள்ளது. 4வது டெஸ்ட் போட்டி 4ம் தேதி மார்ச் மாதம் அஹமதாபாத்தில் நடக்க உள்ளது. அதன்பின் டி 20 தொடர் முழுக்க மார்ச் 12 முதல் 20ம் தேதி வரை அகமதாபாத்தில் நடக்க உள்ளது. அதன்பின் புனேவில் 3 ஒருநாள் போட்டிகளும் மார்ச் மாதத்தில் இருந்து நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .

வீரர்கள்

வீரர்கள்

இந்த நிலையில், இந்த கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று நடந்த பிசிசிஐ கூட்டத்திற்கு பின் இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மான் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, பாண்ட், சாகா, பாண்டியா, கே. எல் ராகுல், பும்ரா, இஷாந்த் சர்மா, சிராஜ், ஷரத்துல் தாக்கூர், அஸ்வின், குல்தீப், வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஜடேஜா

ஜடேஜா

இந்திய டெஸ்ட் அணியில் காயம் காரணமாக ஷமி, ஜடேஜா, புவனேஷ்வர் குமமர், உமேஷ் யாதவ் இடம்பெறவில்லை. அதேபோல் சைனி, நடராஜன் ஆகியோரும் அணியில் இடம்பெறவில்லை. சைனி காலில் ஏற்பட்ட காயத்தால் அணியில் எடுக்கப்படவில்லை. நடராஜன் டெஸ்ட் வீரர் இல்லை என்பதால் அவரும் அணியில் எடுக்கப்படவில்லை.

அறிமுக டெஸ்ட்

அறிமுக டெஸ்ட்

அறிமுக டெஸ்ட் போட்டியில் நடராஜன் நன்றாக பவுலிங் செய்தாலும் அவர் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை. அதேபோல் இவர் டி 20 ஸ்டைல் வீரர் என்பதால் டெஸ்ட் போட்டிக்கு தேர்வாகவில்லை. இந்திய ஒருநாள், டி 20 அணிகள் அறிவிக்கப்படும் போது அதில் நடராஜன் இடம்பெற வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Tuesday, January 19, 2021, 18:26 [IST]
Other articles published on Jan 19, 2021
English summary
Team India announces 18 member squad for home series England next month.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X