For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போய்ட்டு வாங்கக்கா.. சசிகலாவுக்கு ஜெர்சி பரிசு.. புன்னகையுடன் குட்பை சொன்ன இந்திய ஸ்டார்கள்!

மெல்போர்ன்: இலங்கை மகளிர் கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாராக போற்றப்படும் சசிகலா சிறிவர்த்தனே ஒரு வழியாக கிரிக்கெட்டை விட்டு விடை பெற்று விட்டார். அவருக்கு இந்திய வீராங்கனைகள் அருமையான நினைவுப் பரிசை அளித்து நெகிழ வைத்து விட்டனர்.

Recommended Video

Who is shafali verma ? | எதிரணியை மிரட்டும் இளம் வீராங்கனை ஷாபாலி வர்மா

பார்க்கத்தான் பரம சாதுவாக இருக்கிறார் சசிகலா சிறிவர்த்தனே. ஆனால் பேட்டைக் கையில் எடுத்து விட்டால் புலியாகவும், பந்தை வீச ஆரம்பித்தால் சிறுத்தையாகவும் மாறி அதகளம் செய்து விடுவார்.

இலங்கை ஒரு நாள் மகளிர் கிரிக்கெட்டிலேயே 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய ஒரே வீராங்கனை சசிகலா சிறிவர்த்தனேதான். அதேபோல மகளிர் ஒரு நாள் போட்டிகளில் 100 விக்கெட் + 1000 ரன்களை எடுத்த ஒரே இலங்கை வீராங்கனையும் சசிகலா சிறிவர்த்தனேதான். சரியான ஆல் ரவுண்டர்.

உலக தரத்துல இருந்தா மட்டும் போதாது... பொறுப்போட விளையாடனும் -லஷ்மன்உலக தரத்துல இருந்தா மட்டும் போதாது... பொறுப்போட விளையாடனும் -லஷ்மன்

அரை இறுதி கூட போகவில்லை

அரை இறுதி கூட போகவில்லை

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடைபெறும் மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி அரை இறுதிக்குக் கூட தகுதி பெறாமல் வெளியேறி விட்டது. ஆனாலும் சசிகலா சிறிவர்த்தனேவுக்கு இது மறக்க முடியாத தொடர். இலங்கை அணியின் கடைசிப் போட்டியில் பவுலிங்கில் பின்னி விட்டார். 4 விக்கெட்களை வீழ்த்திய அவருக்கு பிளேயர் ஆப் தி மேட்ச் பட்டமும் கிடைத்தது.

35 வயது சசிகலா

17 வருடமாக கிரிக்கெட் ஆடி வருபவர் சசிகலா. 35 வயதாகும் சசிகலா இந்தத் தொடருக்கு முன்பே தான் பங்கேற்கும் கடைசி தொடர் இதுதான் என்று கூறி விட்டார். அதன்படி தனது ஓய்வையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார். இலங்கை அணி இந்தத் தொடரில் ஒரு போட்டியிலும் ஜெயிக்கவில்லை. கடைசியாக வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் மட்டுமே வென்றது. அந்த வெற்றிக்கும் சசிகலாவே காரணம் என்பதால் அந்த நிறைவோடு கிளம்பியுள்ளார் சசிகலா.

இந்திய அணியின் ஜெர்சி பரிசு

இந்திய அணியின் ஜெர்சி பரிசு

இந்தியா - இலங்கை போட்டியின்போது சசிகலாவை சந்தித்த இந்திய சூப்பர் ஸ்டார்கள் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷிகா பாண்டே ஆகியோர் இணைந்து சசிகலாவை கெளரவித்துள்ளனர். அதாவது மூன்று பேரும், இந்திய வீராங்கனைகள் கையெழுத்திட்டிருந்த இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கெளரின் ஜெர்சியை சசிகலாவுக்கு நினைவுப் பரிசாக அளித்தனர். கூடவே முகம் நிறைய சிரித்தபடி ஒரு செல்பியும் எடுத்துக் கொண்டனர்.

ஆல் ரவுண்டர்

ஆல் ரவுண்டர்

சசிகலா மொத்தம் 118 ஒரு நாள் போட்டிகள், 80 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 2000க்கும் மேலான ரன்கள், டி20 போட்டிகளில் 1000க்கும் மேலான ரன்கள் குவித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 120க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும், டி 20 போட்டிகளில் 70க்கும் மேலான விக்கெட்களையும் சாய்த்துள்ளார்.

Story first published: Monday, March 2, 2020, 18:02 [IST]
Other articles published on Mar 2, 2020
English summary
Team India gave a fitting good bye to retiring Sri Lankan star Shashikala Siriwardene with a team Jersey.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X