For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பெரிய தப்பு.. வீடியோவை பாருங்க.. ஆதாரத்துடன் சிக்கிய இந்திய வீரர்.. வச்சு செய்யும் பயிற்சியாளர்கள்

சிட்னி: இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா செய்யும் தவறுகளை இன்று இந்திய அணியின் பயிற்சியாளர்கள் குழு அவருக்கு சுட்டிக்காட்டி இருக்கிறது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடக்க உள்ளது. இதற்காக இந்திய அணி தற்போது தீவிரமாக தயாராகி வருகிறது.

 அட வீட்டுக்கே போயிட்டார்.. செம்ம ஸ்கோர் செய்த உதயநிதி.. தோனி பேன்ஸ் வாக்குகளை அள்ள பக்கா பிளான்! அட வீட்டுக்கே போயிட்டார்.. செம்ம ஸ்கோர் செய்த உதயநிதி.. தோனி பேன்ஸ் வாக்குகளை அள்ள பக்கா பிளான்!

கடந்த இரண்டு நாட்களாக இதற்காக இந்திய அணி வீரர்கள் வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு வீரருக்கு தனி தனியாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பயிற்சி

பயிற்சி

கடந்த போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிக மோசமாக சொதப்பினார்கள். இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதே போன்ற தவறை அடுத்த போட்டியில் செய்ய கூடாது என்பதில் இந்திய பயிற்சி குழு தீவிரமாக உள்ளது.

 ஓப்பனிங்

ஓப்பனிங்

முக்கியமாக இந்திய அணியின் ஓப்பனிங் வீரர் பிரித்வி ஷா இரண்டு இன்னிங்சிலும் மோசமாக ஆடி சொதப்பினார். இவர் நல்ல வீரர் என்றாலும், சிறிய சிறிய தவறுகளால் சொதப்பி தோல்வி அடைகிறார். இவர் மைதானத்தில் நிற்கும் விதம், பேட்டிங் செய்யும் விதம் ஆகியவற்றில் சொதப்பி தனது விக்கெட்டை இழக்கிறார்.

வீடியோ

வீடியோ

பிரித்வி ஷா செய்யும் தவறுகளை இன்று இந்திய அணியின் பயிற்சியாளர்கள் குழு அவருக்கு சுட்டிக்காட்டி இருக்கிறது. இதற்காக அவர் பேட்டிங் செய்த சமீபத்திய போட்டிகளின் வீடியோக்களை பிரித்வி ஷாவிற்கு காட்டியுள்ளனர். அவர் செய்யும் தவறுகளை வீடியோவில் சுட்டிக்காட்டி உள்ளனர்.

பாருங்கள்

பாருங்கள்

உங்கள் தவறுகளை பாருங்கள்.. நீங்கள் பேட்டிங் செய்வதில் மற்றும் நிற்பதில் தவறு செய்கிறீர்கள். மைதானத்தில் நீங்கள் கவனமாக நிற்கவில்லை. ஸ்டம்பில் பெரிய அளவில் இடைவெளி விடுகிறீர்கள். இதுதான் உங்கள் தவறு.

மாற்றுங்கள்

மாற்றுங்கள்

இதை மட்டும் நீங்கள் மாற்றிக்கொண்டால் உங்களுக்கு பிரச்சனை இருக்காது என்று அறிவுரை வழங்கி உள்ளனர். அதேபோல் இன்னும் சில வீடியோ ஆதாரங்களையும் பிரித்வி ஷாவிற்கு காட்டியுள்ளனர். பிரித்வி ஷாவை பயிற்சியாளர் குழு சிறப்பாக கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, December 24, 2020, 12:40 [IST]
Other articles published on Dec 24, 2020
English summary
Team India coach gives special training to Prithvi Shaw before the second match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X