For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எனக்கு எதுவும் ஆகாது.. பயப்படாம போடுங்க.. பயிற்சியில் கெஞ்சிய பண்ட்.. என்ன நடந்தது? - பின்னணி

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பின் இந்திய அணி வீரர்கள் தற்போது நான்காவது டெஸ்ட் போட்டிக்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று டிராவில் முடிந்தது. இப்படிப்பட்ட நிலையில் இரண்டு அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

ரஞ்சிக் கோப்பை தொடரை அடுத்த மாசத்துல நடத்த பிசிசிஐ திட்டம் ரஞ்சிக் கோப்பை தொடரை அடுத்த மாசத்துல நடத்த பிசிசிஐ திட்டம்

இதனால் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. கடைசி போட்டியில் வெற்றிபெறும் அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வெல்லும்.

 பயிற்சி

பயிற்சி

இந்திய அணி வீரர்கள் தற்போது நான்காவது டெஸ்ட் போட்டிக்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். கடுமையான கட்டுப்பாட்டிற்கு இடையே இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். காயம் அடைந்த வீரர்கள் எல்லோரும் ஓய்வு எடுத்து வரும் நிலையில் மற்ற வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

எப்படி

எப்படி

இந்த பயிற்சியில் இந்திய அணியின் அதிரடி வீரர் ரிஷாப் பண்டும் பயிற்சி மேற்கொண்டார். அவருக்கு காலிலும், உடலிலும் அடிப்பட்டு உள்ளது.தோள்பட்டையிலும் லேசான காயம் உள்ளது. ஆனாலும் அவருக்கு பெரிய பாதிப்பு இல்லை என்பதால் அவர் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

மோசம்

மோசம்

இவர் பயிற்சி செய்யும் போது இவருக்கு யார்க்கர் பவுன்சர் பந்துகளை வீச இந்திய பயிற்சியாளர் குழு அஞ்சி இருக்கிறது. பவுன்சர் போட்டு இவர் காயம் அடைந்தால் நன்றாக இருக்காது. அதனால் இவருக்கு சாதாரணமாக பந்துகளை போட்டுள்ளனர். அதேபோல் அதிக வேகத்திலும் இவருக்கு பந்து வீசவில்லை.

 பவுலிங்

பவுலிங்

இவருக்கு காயம் பெரிதானால் ஆட முடியாது என்பதால், பவுலிங் செய்யும் போது இவருக்கு மிகவும் கவனமாக பவுலிங் செய்துள்ளனர். ஆனால் பயிற்சியாளர்கள் இப்படி அஞ்சுவதை பார்த்து பண்ட் கோபம் அடைந்துள்ளார். எனக்கு இப்படி பவுலிங் போடுவதற்கு போடாமலே இருக்கலாம்.

போடுங்கள்

போடுங்கள்

எனக்கு எல்லா விதமான பவுலிங்கையும் வீசுங்கள். இப்படி பாதுகாப்பாக பவுலிங் செய்ய வேண்டும். களத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் எப்படி வீசுவார்களோ அப்படி வீசுங்கள். அதுதான் எனக்கு தேவை என்று பண்ட் கூறியுள்ளார்.

கெஞ்சல்

கெஞ்சல்

எனக்கு எதுவும் ஆகாது. பயப்பட வேண்டாம். நான் நன்றாக பேட்டிங் செய்ய விரும்புகிறேன். கடினமான பந்துகளை வீசுங்கள் என்று கெஞ்சாத குறையாக அவர் பயிற்சியாளர்களை கேட்டு உள்ளார். அடுத்த போட்டியில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடும் எண்ணத்தில் பண்ட் இருக்கிறார் என்கிறார்கள்.

Story first published: Wednesday, January 13, 2021, 11:40 [IST]
Other articles published on Jan 13, 2021
English summary
Team India coaching group afraid to bowl hard balls to Rishabh Pant due to his injury.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X