For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனிமே பிங்க் பால் போட்டியே வேண்டாம்.. வீரர்கள் கோரிக்கை.. அதிர்ச்சி முடிவை எடுக்க பிசிசிஐ பிளான்?

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான இரவு பகல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தாலும் கூட இரவு பகல் ஆட்டங்களில் ஆடும் விருப்பம் இந்திய அணிக்கு இல்லை என்று கூறப்படுகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிரடியாக ஆடி வெற்றிபெற்றுள்ளது. இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறுவதற்கு ஸ்பின் பவுலர்கள் முக்கிய காரணம் ஆகும்.

இன்னா அடி... மேஜிக்கை தொடரும் அக்சர்... 5 விக்கெட்டுகள் சாதனையில் ஹாட்ரிக்! இன்னா அடி... மேஜிக்கை தொடரும் அக்சர்... 5 விக்கெட்டுகள் சாதனையில் ஹாட்ரிக்!

அக்சர் பட்டேல், அஸ்வின் ஆகியோர் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து இங்கிலாந்து அணியை வீழ்த்தினார்கள். இந்திய அணியின் ஸ்பின் பவுலர்களை கிரிக்கெட் ரசிகர்கள், விமர்சகர்கள் தற்போது பாராட்டி வருகிறார்கள்

 இங்கிலாந்து

இங்கிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான இரவு பகல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தாலும் கூட இரவு பகல் ஆட்டங்களில் ஆடும் விருப்பம் இந்திய அணிக்கு இல்லை என்று கூறப்படுகிறது. பிங்க் பாலில் பேட்டிங் செய்ய இந்திய வீரர்கள் மட்டுமின்றி எல்லா அணிகளை சேர்ந்த வீரர்களும் கடுமையாக திணறி வருகிறார்கள்.

பிங்க் பால்

பிங்க் பால்

இதனால்தான் பிங்க் பால் போட்டிகள் 3-4 நாட்களில் முடிந்துவிடுகிறது. கடந்த பிங்க் பால் போட்டி வெறும் 2 நாட்களில் முடிந்துவிட்டது. இந்த நிலையில் இரவு பகல் ஆட்டங்களில் ஆட விருப்பம் இல்லை என்று இந்திய வீரர்கள் பலர் பிசிசிஐயிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

முடியவில்லை

முடியவில்லை

பந்தை பார்க்கவே முடியவில்லை. பந்து வேகமாக திரும்புகிறது. பிங்க் பந்து செயல்படும் விதம் வித்தியாசமாக இருக்கிறது. அதோடு லைட் வெளிச்சத்தில் பிங்க் பந்தை வைத்து பேட்டிங் செய்ய முடிவதில்லை.

புகார்

புகார்

பந்து எப்படி செல்கிறது என்றே தெரியவில்லை. இதனால் பிங்க் பால் போட்டிகளை குறைக்க வேண்டும் என்று இந்திய அணியின் மூத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மூத்த வீரர்கள் ஒன்றாக சேர்ந்து பிசிசிஐ அமைப்பிடம் பேசி உள்ளனர்.

பிசிசிஐ

பிசிசிஐ

வீரர்களின் இந்த கருத்தை பிசிசிஐ ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த பிசிசிஐ முடிவுசெய்துள்ளது. பிங்க் பால் போட்டிகளை தொடர வேண்டுமா, அதில் தொடர்ந்து ஆட வேண்டுமா என்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை செய்ய உள்ளது.

Story first published: Saturday, February 27, 2021, 14:05 [IST]
Other articles published on Feb 27, 2021
English summary
Team India players are not so keen on playing with pink ball in day night.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X