For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கண்ணாடி போல மென்மையான வீரர்கள்.. ரேடாரில் சிக்கிய ரவி சாஸ்திரி.. எல்லாத்துக்கும் இவர்தான் காரணம்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயம் அடைந்த நிலையில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவும், டி 20 தொடரில் இந்தியாவும் வென்ற நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் தீவிரமாக நடந்து வருகிறது.

விராட்டை பின்னுக்கு தள்ளிய ஸ்டீவ் ஸ்மித்... 2வது இடத்திற்கு முன்னேற்றம் விராட்டை பின்னுக்கு தள்ளிய ஸ்டீவ் ஸ்மித்... 2வது இடத்திற்கு முன்னேற்றம்

டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது டெஸ்டில் இந்தியாவும் வெல்ல மூன்றாவது டெஸ்ட் டிரா ஆனது. இந்த நிலையில் நான்காவது டெஸ்டில் வெல்லும் அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை கைப்பற்றும்.

காயம்

காயம்

இப்படி டெஸ்ட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் நிலையில் தற்போது இந்திய அணி வீரர்கள் வரிசையாக காயம் காரணமாக கஷ்டப்பட்டு வருகிறார்கள். இந்திய அணியின் முக்கிய வீரர்கள் எல்லோரும் காயம் அடைந்துவிட்டனர். இப்போது இந்திய ஏ டீம் வீரர்கள் போன்ற அணிதான் ஆஸ்திரேலியாவில் மீதம் உள்ளது.

எத்தனை பேர்

எத்தனை பேர்

அதன்படி இந்திய அணியில் ஜடேஜா, விஹாரி, பும்ரா, ராகுல், உமேஷ் யாதவ், ஷமி , புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா ஆகிய வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். ரோஹித் சர்மா காயம் அடைந்து மீண்டு வந்துள்ளார். இன்னொரு பக்கம் அஸ்வின், பண்ட், மயங்க் அகர்வால் லேசான காயத்தோடு உள்ளனர்.

ஏன்

ஏன்

இந்திய வீரர்கள் இப்படி அடுத்தடுத்து காயம் அடைந்து வரும் நிலையில், இந்திய வீரர்களின் இந்த தொடர் காயத்திற்கு பயிற்சியாளர்கள் வீரர்களாய் அணுகும் விதமும் ஒரு காரணம் என்று கூறுகிறார்கள். இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயம் அடைந்த நிலையில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளார். அனைத்திற்கும் ரவி சாஸ்திரிதான் காரணம் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

 பயிற்சியாளர்

பயிற்சியாளர்

ஒவ்வொரு வீரரின் உடலுக்கும் ஏற்ப பயிற்சியாளர் குழுதான் டயட் தயார் செய்ய வேண்டும். அதேபோல் அவர்களுக்கு ஏற்ற உடற்பயிற்சி திட்டங்களை வகுக்க வேண்டும். ஆனால் ரவி சாஸ்திரி தலைமையிலான பயிற்சி குழு இப்படியான திட்டங்களை வகுக்கவில்லை. பேட்ஸ்மேன்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான பயிற்சி, பவுலர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான பயிற்சி என்று இந்திய அணி செயல்பட்டு வருகிறது.

மோசம்

மோசம்

அதிலும் ரோஹித் சர்மா, பண்ட் போன்றவர்கள் அதிக உடல் எடையால் கஷ்டப்படும் நிலைக்கு செல்ல போதிய பயிற்சி இன்மையே காரணம். இன்னொரு பக்கம் ஷமி, உமேஷ் போன்ற வீரர்கள் வாரத்திற்கு ஒரு முறை காயம் அடைகிறார்கள். கண்ணாடி போல வீரர்கள் மிகவும் மென்மையாக மாறி உள்ளனர். நன்றாக ஆடினாலும், அவ்வளவு வலிமையாக இல்லை என்று இவர்கள் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது.

மாற்ற வேண்டும்

மாற்ற வேண்டும்

இந்திய வீரர்களுக்கு உடனே சிறப்பான பயிற்சிகளை அளிக்க வேண்டும். வீரர்கள் மீது பயிற்சியாளர் குழு தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் வீரர்கள் இப்படி அடுத்தடுத்து காயம் அடைய மாட்டார்கள். இந்திய அணியின் பயிற்சிக்குழு உடனே தனது பயிற்சி செய்யும் விதத்தை மாற்ற வேண்டும், என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

Story first published: Tuesday, January 12, 2021, 21:58 [IST]
Other articles published on Jan 12, 2021
English summary
Team India players become so fragile due to less practice given by Ravi Sasthiri and co.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X