“2 பேர் வெளியேறுவது உறுதி” 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11..கே.எல்.ராகுல் அதிரடி முடிவு

பார்ல்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டிக்கான ப்ளேயிங் 11ல் அதிரடி மாற்றங்கள் ஏற்படுத்தவுள்ளார் கே.எல்.ராகுல்.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணி 1 - 0 என முன்னிலை வகிக்கிறது.

வாழ்வா? சாவா? என்ற கட்டத்தில் 3வது ஒருநாள் போட்டியில் நாளை இந்திய அணி விளையாடவுள்ளது.

களத்தில் 5 தமிழக வீராங்கனைகள்..!! 18 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கால்பந்து கோப்பையில் இந்திய மகளிர் அணிகளத்தில் 5 தமிழக வீராங்கனைகள்..!! 18 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கால்பந்து கோப்பையில் இந்திய மகளிர் அணி

 ப்ளேயிங் 11 திட்டம்

ப்ளேயிங் 11 திட்டம்

முதல் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் என வீரர்கள் சொதப்பியதால் 2வது போட்டியின் ப்ளேயிங் 11-காக அதிரடி மாற்றங்கள் செய்யப்படவுள்ளது. ஓப்பனிங்கை பொறுத்தவரை கே.எல்.ராகுடன் சேர்ந்து ஷிகர் தவான் மீண்டும் களமிறங்கவுள்ளனர். மிடில் ஆர்டரில் பேட்டிங் பலவீனமாக இருப்பதால், அதனை நிரப்ப சூர்யகுமார் யாதவ் அணிக்குள் கொண்டு வரப்படவுள்ளார்.

என்ன காரணம்

என்ன காரணம்

லோயர் மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட், வெங்கடேஷ் ஐயர் என அடுத்தடுத்து 2 அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளனர். அவர்களின் இயற்கையான ஆட்டமே அதிரடி காட்டுவது தான் என்பதால் மிடில் ஆர்டரில் இந்திய அணியை மீட்க முடியாது. எனவே வெங்கடேஷ் ஐயரை நீக்கவுள்ளனர். மேலும் அவருக்கு பவுலிங் வாய்ப்பும் கொடுக்கப்படாமல் உள்ளதால், முழு நேர பேட்ஸ்மேனை கொண்டு வருவது சரியான திட்டம் தான் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஷர்துலின் இடம் இல்லை

ஷர்துலின் இடம் இல்லை

இதே போல மற்றொரு ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்கூரும் நீக்கப்படவுள்ளார். ஷர்துல் தாக்கூர் கடந்த போட்டியில் அரைசதம் அடித்திருந்தார். எனினும் அவரின் முக்கிய பணியான பவுலிங்கில் ஓவருக்கு சராசரியாக 7 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். எனவே அவரை நீக்கவிட்டு முழு நேர பவுலரான முகமது சிராஜிற்கு வாய்ப்பு கொடுக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஷர்துலை நீக்கினாலும் கூடுதலாக பேட்ஸ்மேன் வருவதால் இந்திய அணி சமாளித்துவிடும்.

 இந்திய ப்ளேயிங் 11

இந்திய ப்ளேயிங் 11

கே.எல்.ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், அஸ்வின், புவனேஷ்வர் குமார், பும்ரா, முகமது ஷமி, யுவேந்திர சஹால்

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
South Africa are already 1-0 up in the three-match ODI series. In this situation, KL Rahul will make drastic changes in Playing 11 for the 2nd ODI against South Africa.
Story first published: Thursday, January 20, 2022, 17:37 [IST]
Other articles published on Jan 20, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X