For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 அதிரடி முடிவுகள்.. 4வது டி20 போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11.. வெளியேறும் வீரர்கள் யார்? யார்?

ஃப்ளோரிடா: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 4வது டி20 போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11ல் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளில் இந்திய அணி 2 - 1 என முன்னிலை வகித்து வருகிறது.

4வது டி20 போட்டி

4வது டி20 போட்டி

இந்திய அணி தொடரை கைப்பற்றுவதற்கான 4வது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. முதல் 3 போட்டிகளும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற சூழலில் கடைசி 2 போட்டிகளும் அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் நடைபெறவிருக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால், கடைசி போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தரலாம் என்பதால் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அணி மாற்றங்கள்

அணி மாற்றங்கள்

காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த ரோகித் சர்மா, முழுவதுமாக குணமடைந்துவிட்டார். எனவே அவருடன் வழக்கம் போல சூர்யகுமார் யாதவ் ஓப்பனிங் ஆடலாம். ஸ்ரேயாஸ் ஐயர் இந்த முறை நிச்சயம் நீக்கப்படலாம் எனத்தெரிகிறது. முதல் 3 போட்டிகளில் அவர் 0,10, 23 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். ஒருவேளை ஸ்ரேயாஸ் ஐயர் ஃபார்முக்கு திரும்ப மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டால், சஞ்சு சாம்சன் மீண்டும் காத்திருக்க வேண்டும்.

பவுலிங் படை

பவுலிங் படை

மிடில் ஆர்டரை பொறுத்தவரையில் தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். பந்துவீச்சை பொறுத்தவரையில் ரவீந்திர ஜடேஜா இன்னும் முழுமையாக குணமடையவில்லை. ரவி பிஷ்னாய் சரியான ஃபார்மில் இல்லை. எனவே பெஞ்சில் அமர்ந்துள்ள குல்தீப் யாதவுக்கு இந்த முறை வாய்ப்பு கொடுக்கலாம் எனத்தெரிகிறது. மற்றொரு ஸ்பின்னராக ரவிச்சந்திரன் அஸ்வின் அல்லது அக்‌ஷர் பட்டேல் விளையாடுவார்கள்.

ஹர்ஷல் பட்டேல் கம்பேக்

ஹர்ஷல் பட்டேல் கம்பேக்

வேகப்பந்துவீச்சை பொறுத்தவரையில் சீனியர் பவுலரான புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வு கொடுக்கலாம் எனத்தெரிகிறது. ஆவேஷ் கான் மிகவும் மோசமான பந்துவீச்சை செயல்படுத்தி வருவதால், அவரும் உட்காரவைக்கப்படலாம். எனவே அவரின் இடத்தில் மீண்டும் ஹர்ஷல் பட்டேல் கொண்டு வரப்படலாம். இதே போல அர்ஷ்தீப் சிங் நல்ல ஃபார்மில் இருப்பதால் அவர் ப்ளேயிங் 11ல் நீடிப்பார்.

ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், தீபக் ஹுடா, ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அஸ்வின் / அக்‌ஷர், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல், குல்தீப் யாதவ்

Story first published: Friday, August 5, 2022, 14:01 [IST]
Other articles published on Aug 5, 2022
English summary
Team India playing 11 for 4th t20 match against west indies
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X