For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இளம் வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. அறிமுகம் முதல் கம்பேக் வரை.. முதல் ஒருநாள் போட்டியில் சுவாரஸ்யம்

லக்னோ: இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த வீரர்களுக்கு பெரும் ஜாக்பாட் அடித்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணியுடனான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2 -1 என கைப்பற்றி அசத்தியது.

இதனையடுத்து இரு அணிகளும் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்குகிறது.

இந்திய அணிக்கு நற்செய்தி.. புகைப்படத்தில் அந்த ஒரு வீரரை கவனித்தீர்களா??. இனி கவலையே இல்லை!இந்திய அணிக்கு நற்செய்தி.. புகைப்படத்தில் அந்த ஒரு வீரரை கவனித்தீர்களா??. இனி கவலையே இல்லை!

ஒருநாள் கிரிக்கெட் தொடர்

ஒருநாள் கிரிக்கெட் தொடர்

இன்று மதியம் 2 மணியளவில் லக்னோவில் உள்ள வாஜ்பாய் மைதானத்தில் போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டதால், இந்த ஒருநாள் தொடருக்காக புதிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும், சஞ்சு சாம்சன் துணை கேப்டனாகவும் செயல்படவுள்ளனர்.

ப்ளேயிங் 11 கணிப்பு

ப்ளேயிங் 11 கணிப்பு

இந்திய அணியின் ஓப்பனிங்கை பொறுத்தவரையில் கேப்டன் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு வாய்ப்பு இருக்காது எனத் தெரிகிறது. முதல் விக்கெட்டிற்கு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் 2வது விக்கெட்டிற்கு சஞ்சு சாம்சன் ஆகியோர் களமிறங்கவுள்ளனர். சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராகவும் செயல்படவுள்ளார்.

 அறிமுக வீரர்

அறிமுக வீரர்

ஐபிஎல் தொடரில் கலக்கிய இளம் வீரர் ராஜத் பட்டிதார் இந்த போட்டியின் மூலம் இந்திய அணிக்கு அறிமுகமாவார் என தெரிகிறது. இவருக்கு அடுத்தபடியாக ராகுல் திரிபாதியும் களமிறங்கலாம். ஐபிஎல் தொடரில் மிகச்சிறப்பாக செயல்பட்ட போதும் திரிபாதிக்கு வாய்ப்பே கிடைக்காமல் உள்ளது. எனவே இந்த வாய்ப்பை அவர் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

 பவுலிங் படை

பவுலிங் படை

ஆல்ரவுண்டர்களை பொறுத்தவரையில் ஷர்துல் தாக்கூர் மற்று தீபக் சஹார் இருவருமே களம் காணவுள்ளனர். இந்திய அணியில் முன்னணி வீரர்களாக வலம் வந்த இவர்கள் காயம் காரணமாக வெளியேறினர். இதனால் இந்த போட்டி அவர்களுக்கு ஒரு கம்பேக்காக அமையலாம். குறிப்பாக டி20 உலகக்கோப்பை அணியில் பும்ராவுக்கு மாற்றாக இடம்பெற சஹாருக்கு இது முக்கிய வாய்ப்பாகும்.

 சிராஜ்-க்கு வாய்ப்பு

சிராஜ்-க்கு வாய்ப்பு

அணியின் 3வது வேகப்பந்துவீச்சாளராக முகமது சிராஜ் நிச்சயம் இடம்பெறுவார். டி20 உலகக்கோப்பையில் பும்ராவுக்கு மாற்று வீரர் யார் என்ற குழப்பம் இருந்து வரும் சூழலில் முகமது சிராஜின் பெயர் தான் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எனவே இதில் அவர் தன்னை நிரூபித்தே ஆக வேண்டும்.

2 ஸ்டார் ஸ்பின்னர்கள்

2 ஸ்டார் ஸ்பின்னர்கள்

சுழற்பந்துவீச்சில் இளம் வீரர்கள் குல்தீப் யாதவ் மற்றும் ரவி பிஷ்னாய் களம் காணவுள்ளனர். இவர்கள் இருவருமே இந்திய அணியின் எதிர்காலமாக பார்க்கப்பட்ட சூழலில் திடீரென வாய்ப்பில்லாமல் போனார்கள். எனவே இந்த தொடரில் சிறப்பாக விளையாடினால் 2023ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.

Story first published: Thursday, October 6, 2022, 16:41 [IST]
Other articles published on Oct 6, 2022
English summary
Jackpot for Young players in India vs south africa 1st ODI match, Senior players planning for comeback
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X