For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாகிஸ்தானை முந்திய இந்தியா.. டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஐதராபாத்: ஆஸ்திரேலிய அணியுடனான வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய சாதனையை படைத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது.

நேற்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 186 ரன்கள் என்ற இலக்கை அபாரமாக விரட்டியது.

பலே ஆளுங்க நீங்க... ரோகித் சர்மாவுக்கு மறைமுகமாக செக் வைத்த சூர்யகுமார்.. இதை கவனிச்சீங்களா?? பலே ஆளுங்க நீங்க... ரோகித் சர்மாவுக்கு மறைமுகமாக செக் வைத்த சூர்யகுமார்.. இதை கவனிச்சீங்களா??

இந்திய அணி வெற்றி

இந்திய அணி வெற்றி

இந்திய அணி தரப்பில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 69 ரன்களை விளாசினார். இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய விராட் கோலி 48 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 63 ரன்களை அடித்தார். கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்ட்யா 16 பந்துகளில் 25 ரன்களை சேர்க்க இந்திய அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டியது.

புதிய சாதனை

புதிய சாதனை

இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி பிரமாண்ட சாதனையை படைத்துள்ளது. அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக வெற்றிகளை பெற்ற அணியாக இந்தியா உருவெடுத்துள்ளது. நடப்பாண்டில் மட்டும் 21 வெற்றிகளை ரோகித் சர்மாவின் படை பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக 2021ம் ஆண்டு பாகிஸ்தான் அணி 20 வெற்றிகளுடன் இந்த ரெக்கார்டை வைத்திருந்தது.

ஸ்பெஷலான வெற்றி

ஸ்பெஷலான வெற்றி

இதுமட்டுமல்லாமல் இந்திய அணிக்கு சேஸிங்கிலும் இது ஸ்பெஷல் வெற்றி தான். கடந்த 2021ம் ஆண்டில் இருந்து இதுவரை இந்தியா 14 போட்டிகளில் 2வதாக பேட்டிங் செய்துள்ளது. இதில் 13 முறை வெற்றிகரமாக இலக்கை விரட்டி வெற்றி கண்டுள்ளது. ஒரே ஒரு முறை தான் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

ஆசிய கோப்பை தொடரில் சொதப்பிய இந்திய அணி, ஆஸ்திரேலிய தொடரில் கம்பேக் கொடுத்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும் இந்தியாவின் பவுலிங் இன்னும் கவலையளிக்கும் வகையில் இருப்பதால், தென்னாப்பிரிக்க தொடரிலாவது சரி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, September 26, 2022, 17:22 [IST]
Other articles published on Sep 26, 2022
English summary
Team India creates a world record by Beating Australia in 3rd T20 Cricket, Pakistan set back to 2nd position in elite list
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X