For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“இது லிஸ்ட்லையே இல்லையே” இங்கி, டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. ரசிகர்களுக்கு வைத்த ட்விஸ்ட்

மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

Recommended Video

IND vs ENG: India-வின் T20I & ODI Squad அறிவிப்பு! | Aanee's Appeal | *Cricket

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஒரு டெஸ்ட் போட்டி, 3 டி20 போட்டி, 3 ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.

டெஸ்ட் போட்டி இன்று நடைபெறவுள்ள சூழலில் அடுத்ததாக வரவுள்ள டி20 தொடர் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்திய அணி பிளேயிங் லெவன்.. பிசிசிஐ எடுத்த புதிய முடிவுஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்திய அணி பிளேயிங் லெவன்.. பிசிசிஐ எடுத்த புதிய முடிவு

 இந்திய அணி அறிவிப்பு

இந்திய அணி அறிவிப்பு

முதல் டி20 போட்டி வரும் ஜூலை 7ம் தேதி நடைபெறவுள்ளது. இங்கிலாந்துடனான டெஸ்ட் வரும் ஜூலை 5ம் தேதியன்று தான் முடிவடைகிறது. எனவே டெஸ்ட் போட்டியில் ஆடிய வீரர்களுக்கு முதல் டி20 போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து தொடரில் விளையாடிய அணியே, இங்கிலாந்துடனான முதல் டி20 போட்டியிலும் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கேப்டனாக ரோகித் சர்மா தான் செயல்படவுள்ளார்.

இந்திய படை

இந்திய படை

ரோகித் சர்மா, இஷான் கிஷான், ருதுராஜ் கெயிக்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, வெங்கடேஷ் ஐயர், யுவேந்திர சாஹல், அக்‌ஷர் பட்டேல், ரவி பிஷ்னாய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்

மற்ற 2 போட்டிகள்

மற்ற 2 போட்டிகள்

அடுத்த 2 டி20 போட்டிகளிலும் இந்திய அணியின் முதன்மை அணி களமிறங்குகிறது. ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, ரிஷப் பண்ட், பும்ரா, ஜடேஜா ஆகியோர் அணிக்கு திரும்புகின்றனர். அயர்லாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்ட அறிமுக வீரர்கள் தீபக் ஹூடா, உம்ரான் மாலிக்கிற்கும் இதில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

முழு படை

முழு படை

ரோகித் சர்மா, இஷான் கிஷான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், ரவி பிஷ்னாய், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், ஹர்ஷல் பட்டேல், உம்ரான் மாலிக்

Story first published: Friday, July 1, 2022, 9:46 [IST]
Other articles published on Jul 1, 2022
English summary
Team India Squad for England t20 series ( இந்தியா vs இங்கிலாந்து தொடர் ) இங்கிலாந்துடனான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X