For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதிகரித்த கொரோனா..இந்திய வீரர்களின் பாதுகாப்புக்காக..பிசிசிஐ செய்த அதிரடி ஏற்பாடு..ரசிகர்கள் நிம்மதி

மும்பை: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல், ரசிகர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.

Recommended Video

India vs Srilanka தொடரில் செய்யப்பட்ட புதிய மாற்றம்.. ஏன் இவ்வளவு குழப்பங்கள் ?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை இழந்த இந்திய அணி, அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்குகிறது.

1983 உலகக்கோப்பையின் நட்சத்திர வீரர்.. யஷ்பால் சர்மா திடீர் மரணம்.. சோகத்தில் இந்திய ரசிகர்கள்!1983 உலகக்கோப்பையின் நட்சத்திர வீரர்.. யஷ்பால் சர்மா திடீர் மரணம்.. சோகத்தில் இந்திய ரசிகர்கள்!

ரசிகர்கள் கவலை

ரசிகர்கள் கவலை

இந்த தொடருக்கு இன்னும் 3 வார காலம் உள்ள நிலையில் சிறிய சிக்கல் ஒன்று ஏற்பட்டது. இங்கிலாந்து அணி சமீபத்தில் இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்று விளையாடியது. அப்போது இங்கிலாந்து அணியில் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. எனவே வீரர்கள் அனைவரும் ஹோட்டல் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் இந்திய ரசிகர்கள் குறித்த கவலை ரசிகர்களுக்கு ஏற்பட்டது.

இன்ப சுற்றுலா

இன்ப சுற்றுலா

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பிறகு இந்திய வீரர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் இங்கிலாந்தில் சுற்றுலா சென்று வருகின்றனர். அவர்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஜாலியாக வலம் வரும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது. எனினும் இங்கிலாந்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அவர்களுக்கு அவ்வபோது பிசிசிஐ சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தடுப்பூசி

தடுப்பூசி

இந்நிலையில் இந்திய வீரர்கள் அனைவருக்கும் முழுமையாக 2வது தவனை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வீரர்கள், இந்தியாவிலேயே முதல் தவனை தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் 2வது தவனை தடுப்பூசியை இங்கிலாந்திலேயே போட்டுக்கொள்ள பிசிசிஐ ஏற்பாடு செய்தது. அதன்படி கடந்த ஜூலை 8ம் தேதி முதல் நடைபெற்று வந்த இந்த முகாமில், இந்திய அணி அனைவருக்கு தடுப்பூசி போடப்பட்டுவிட்டது.

பயிற்சி போட்டிகள்

பயிற்சி போட்டிகள்

இங்கிலாந்து தொடருக்காக, கவுண்டி அணிகளுடன் பயிற்சி போட்டிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது பிசிசிஐ. எனவே இந்திய வீரர்கள் அனைவரும் விரைவில் பபுள்களுக்குள் அழைக்கப்பட்டு, பல கட்ட கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் நெகட்டீவ் என முடிவு வந்த பிறகே பயிற்சி ஆட்டங்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

Story first published: Tuesday, July 13, 2021, 16:14 [IST]
Other articles published on Jul 13, 2021
English summary
Team Indian players fully got vaccinated, set to Enter the Bio bubble and Complete Corona tests in England
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X