For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அணியில 11 வீரர்களுக்கு மேல அதிகமா இருக்கு... பெயர் மாற்றம் சந்தோஷமா இருக்கு... கேப்டன் மகிழ்ச்சி

டெல்லி : ஐபிஎல்லில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் பஞ்சாப் கிங்ஸ் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பெயர் மாற்றம் மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.

6 ரன்கள்தான்... பெவிலியனுக்கு திரும்பிய கேப்டன்... அறிமுக போட்டியில் அக்சர் அபாரம்! 6 ரன்கள்தான்... பெவிலியனுக்கு திரும்பிய கேப்டன்... அறிமுக போட்டியில் அக்சர் அபாரம்!

கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணி கடந்த ஐபிஎல்லில் 6வது இடத்தில் தொடரை முடித்தது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் அணி பெயர் மாற்றம்

பஞ்சாப் அணி பெயர் மாற்றம்

ஐபிஎல்லில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தற்போது ஐபிஎல் 2021 ஏலத்திற்கு தயாராகி வருகிறது. அணியின் க்ளென் மாக்ஸ்வெல், ஜிம்மி நீசம் மற்றும் ஷெல்டன் காட்ரெல் ஆகியோர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் 53.20 கோடி ரூபாயுடன் ஐபிஎல் ஏலத்தை பஞ்சாப் அணி எதிர்கொள்ளவுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் பெயர் மாற்றம்

பஞ்சாப் கிங்ஸ் பெயர் மாற்றம்

இந்நிலையில் நேற்றைய தினம் தனது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி என்ற பெயரை பஞ்சாப் கிங்ஸ் என மாற்றம் செய்துள்ளது. மேலும் லோகோவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாற்றம் மகிழ்ச்சியை அளித்துள்ளதாக அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.

அதிர்ஷ்டத்தை கொடுக்கும்

அணியின் சிறிய சிறிய மாற்றங்கள் அதிர்ஷ்டத்தை அளிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிஞ்சாப் கிங்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள ராகுல், கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்ற பெயர் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றாலும், 11 வீரர்களை தாண்டி அணியில் அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கிறிஸ் கெயில் மகிழ்ச்சி

இந்நிலையில் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெயிலும் இந்த பெயர் மாற்றம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கடந்த ஐபிஎல் 2020 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6வது இடத்தில் தொடரை முடித்த நிலையில், அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 14 போட்டிகளில் விளையாடி 670 ரன்களை குவித்து ஆரஞ்சு கேப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, February 18, 2021, 13:47 [IST]
Other articles published on Feb 18, 2021
English summary
Punjab finished sixth on the points table in last year's IPL
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X