For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சன் ரைசர்ஸ் அணியை இப்படி தான் ஊதி தள்ளினோம்… ஸ்மித் வெளியிட்ட வெற்றியின் ரகசியம்

ஜெய்ப்பூர்:அணியில் குழுவாக இருந்ததால் வெற்றி பெற முடிந்தது என்று ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடந்து வருகிறது. அதில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய 45வது லீக் ஆட்டம் ஜெய்பூரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனை அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் களமிறங்கியது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக மணிஷ் பாண்டே 36 பந்துகளில் 9 பவுண்டரி உதவியுடன் 61 ரன்கள் எடுத்தார்.

ஒரு டென்ஷன் இல்லை.. பரபரப்பு இல்லை.. என்னங்க டி20 இது? சன்ரைசர்ஸ்-ஐ ஊதித் தள்ளிய ராஜஸ்தான்! ஒரு டென்ஷன் இல்லை.. பரபரப்பு இல்லை.. என்னங்க டி20 இது? சன்ரைசர்ஸ்-ஐ ஊதித் தள்ளிய ராஜஸ்தான்!

தலா 2 விக்கெட்டுகள்

தலா 2 விக்கெட்டுகள்

டேவிட் வார்னர் 32 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் தாமஸ், கோபால், உடன்கட், ஆரோன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

வெற்றிக்கு பக்கபலம்

வெற்றிக்கு பக்கபலம்

ஹைதராபாத் பேட்டிங்கை தொடர்ந்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.1 ஓவரில் வாகை சூடியது. சஞ்சு சாம்சன், அஜிங்கியா ரகானே, லியாம் லிவிங்ஸ்டன் ராஜஸ்தான் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தனர்.

சன் ரைசர்ஸ் தோல்வி

சன் ரைசர்ஸ் தோல்வி

சஞ்சு சாம்சன் அவுட் ஆகாமல் 32 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். லியாம் லிவிங்ஸ்டன் 26 பந்துகளில் 4 பவுண்டரி உதவியுடன் 44 ரன்கள் எடுத்தார். 34 பந்துகளை சந்தித்த ரகானே 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது.

கூட்டு முயற்சியால் வெற்றி

கூட்டு முயற்சியால் வெற்றி

போட்டிக்கு பின் பேசிய ஸ்மித், அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:இந்த போட்டியை நாங்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டோம்.

வெற்றி தொடரும்

வெற்றி தொடரும்

சன் ரைசர்ஸ் அணியினர் சிறப்பாக விளையாடினர். அவர்களை போலவே நாங்களும் கொஞ்சம் கூடுதலாக ஆடியதால் வெற்றி கிடைத்தது. 160 ரன்களுக்குள் சன் ரைசர்ஸ் அணியை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்து செயல்பட்டோம். லயம் லிவிங்ஸ்டன், சஞ்சு சாம்சன் நன்றாக விளையாடினர். அடுத்து வரக்கூடிய போட்டிகளிலும் இனி வெற்றியை பார்க்கலாம் என்றார்.

Story first published: Sunday, April 28, 2019, 11:25 [IST]
Other articles published on Apr 28, 2019
English summary
Team work leads to victory says rajasthan royals captain smith.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X