10 வீரர்கள் அவுட்.. 2 பேர் ஆடுவது டவுட்.. இந்திய அணியில் மிச்சம் இருப்பது எத்தனை பேர்..முழு விபரம்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரில் மொத்தம் 10 இந்திய வீரர்கள் காயம் அடைந்து உள்ளனர்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவும், டி 20 தொடரில் இந்தியாவும் வென்ற நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்தியா மட்டும் கடைசி மேட்ச்சை ஜெயித்தால்.. பாராட்டித் தள்ளிய சோயப் அக்தர்!

டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது டெஸ்டில் இந்தியாவும் வெல்ல மூன்றாவது டெஸ்ட் டிரா ஆனது. இந்த நிலையில் நான்காவது டெஸ்டில் வெல்லும் அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை கைப்பற்றும். இந்த டெஸ்ட் தொடரின் கடைசி போட்டிக்கு முன்பாக பல இந்திய வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.

தொடருக்கு முன் காயமடைந்த வீரர்கள்

தொடருக்கு முன் காயமடைந்த வீரர்கள்

ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பே முக்கியமான சில பவுலர்கள் காயம் அடைந்தனர்.

புவனேஷ்வர்குமார் - ஐபிஎல் பாதியில் காயம் அடைந்தார்.

இஷாந்த் சர்மா - ஐபிஎல் தொடருக்கு முன்பே காயம் அடைந்தார்.

வருண் சக்ரவர்த்தி - தொடரின் போது காயம் அடைந்து, ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வாகி பின் நீக்கப்பட்டார்.

தொடரின் போது காயம் அடைந்தவர்கள்:

தொடரின் போது காயம் அடைந்தவர்கள்:

ஆஸ்திரேலிய தொடரின் போதே இந்திய அணியின் முக்கியமான சில பவுலர்கள் காயம் அடைந்தனர்.

முகமது ஷமி - முதல் டெஸ்டிற்கு பின் காயம் அடைந்தனர்.

உமேஷ் யாதவ்- இரண்டாவது டெஸ்டிற்கு பின் காயம் அடைந்தார்.

பும்ரா - மூன்றாவது டெஸ்டிற்கு பின் காயம் அடைந்தார்.

பேட்ஸ்மேன்கள் காயம்

பேட்ஸ்மேன்கள் காயம்

ஆஸ்திரேலிய தொடரின் போதே இந்திய அணியின் முக்கியமான சில பேட்ஸ்மேன்கள் காயம் அடைந்தனர்.

கே. எல் ராகுல் - இரண்டாவது டெஸ்டிற்கு பின் பயிற்சியில் காயம் அடைந்தனர். எந்த டெஸ்ட் போட்டியிலும் ஆடவில்லை.

ஜடேஜா - மூன்றாவது டெஸ்டிற்கு பின் காயம் அடைந்தார்.

விஹாரி - மூன்றாவது டெஸ்டிற்கு பின் காயம் அடைந்தார்.

சந்தேகமான நிலையில் உள்ளவர்கள்

சந்தேகமான நிலையில் உள்ளவர்கள்

இதில் காயம் அடைந்த வீரர்கள் போக மற்ற சில வீரர்கள் ஆடுவது இன்னும் சந்தேகமாக உள்ளது. பாதி பிட்னசில் சில வீரர்கள் உள்ளனர்.

அஸ்வின் - 60-70% பிட்னசோடு உள்ளார்.

பண்ட்- லேசான காயங்களோடு உள்ளார். ஆனாலும் ஆடுவார்.

மயங்க் அகர்வால் - முழுமையாக ஆடுவது சந்தேகம்.

மீதம் இருக்கும் வீரர்கள்

மீதம் இருக்கும் வீரர்கள்

தற்போது இந்திய அணியில் ஆட கூடிய நிலையில் பிட்டாக இருக்கும் வீரர்கள்.

ரோஹித் சர்மா, சுப்மான் கில், பிரித்வி ஷா, புஜாரா, ரஹானே, பண்ட், சாகா, நடராஜன், ஷரத்துல் தாக்கூர், சைனி, சிராஜ், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகியோர் இந்திய அணியில் ஆட கூடிய நிலையில் 100% பிட்டாக உள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Ten players injured and Two players are doubtful for the team India against Australia for the 4th test.
Story first published: Wednesday, January 13, 2021, 18:10 [IST]
Other articles published on Jan 13, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X