For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி சொல்றது தான் ரொம்ப கரெக்ட்.. சச்சின் சூப்பர் சப்போர்ட்.. எதற்காக அப்படி சொன்னாரு?

மும்பை:இந்திய கிரிக்கெட் வீரர்களின் வேலைப்பளு என்பது வீரர்களுக்கு வீரர் மாறுபட்டது என்று முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன் ஐபிஎல் தொடர் நடக்கிறது. ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இருமுறை மோத வேண்டும்.

அதன்படி இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் 14 போட்டிகளில் விளையாட வேண்டிய நிலை ஏற்படும். உலக கோப்பைக்கும், ஐபிஎல் தொடருக்கும் இடையில் குறைந்த நாட்களே உள்ளது.

முதல்ல ஐபிஎல்... அப்படியே நேரா திரும்பினா உலக கோப்பை.. சூப்பர் ஸ்கெட்ச் போடும் அந்த இளம்வீரர் முதல்ல ஐபிஎல்... அப்படியே நேரா திரும்பினா உலக கோப்பை.. சூப்பர் ஸ்கெட்ச் போடும் அந்த இளம்வீரர்

அணி நிர்வாகம் கவலை

அணி நிர்வாகம் கவலை

அதனால் உலக கோப்பைக்கான இந்திய அணியில் விளையாட அடையாளம் காணப்பட்டுள்ள வீரர்களின் வேலைப்பளு குறித்து இந்திய அணி நிர்வாகம் கவலையடைந்துள்ளது. அது குறித்து கோலி கூறியதாவது:போட்டிகளின் போது ஒவ்வொரு வீரரும் கவனமாக செயல்பட வேண்டும். ஆட்டத்துடன் உடல்தகுதியும் முக்கியம் என்றார்.

சச்சின் ஆதரவு

சச்சின் ஆதரவு

அவரது இந்த கருத்துக்க சச்சின் டெண்டுல்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:உலக கோப்பை தொடருக்கு முன் தயாராகுவது ஒவ்வொரு வீரர்களுக்கும் மாறுபட்ட ஒன்று. ஆகவே வேலைப்பளுவை நிர்வகிப்பதும் ஒவ்வொரு வீரர்களுக்கும் மாறுபட்டது.

ஓய்வு அவசியம்

ஓய்வு அவசியம்

என்னைப் பொறுத்த வரை, ஒவ்வொரு வீரர்களுக்கும் தனிப்பட்ட முறையில் ஓய்வு தேவை என்றால், அதை சிறந்த முறையில் மதிப்பிட்டு கொள்ளலாம். அதனால் ஒவ்வொரு வீரர்களும் தனிப்பட்ட முறையில் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வித்தியாசம் இருக்கிறது

வித்தியாசம் இருக்கிறது

பும்ராவின் வேலைப்பளுவை பாருங்கள்? பேட்டிங் மட்டுமே செய்யும் கோலிக்கும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்று பயணிக்கும் தோனிக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது.

முடிவு எடுப்பார்கள்

முடிவு எடுப்பார்கள்

அனைத்து வீரர்களுக்கும் அதிக அளவில் அனுபவம் உள்ளது. தகுந்த நேரங்களில் அவர்கள் மிக சரியான முடிவை எடுப்பார்கள் என்றார்.

Story first published: Tuesday, March 19, 2019, 16:43 [IST]
Other articles published on Mar 19, 2019
English summary
Tendulkar agreed with skipper Virat Kohli, who recently left it up to the players to decide the kind of load they are taking.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X