For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சான்டா கிளாசாக மாறிய சச்சின் டெண்டுல்கர்... கிறிஸ்துமஸ் வாழ்த்து!

மும்பை : கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று சர்வதேச அளவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லஷ்மன் மற்றும் சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை சமூகவலைதளங்கள் மூலம் பகிர்ந்துள்ளனர்.

தரமான சம்பவம்தான்... ஆனா பொறுப்பும் அதிகமாகியிருக்கு... மனம் திறந்த கேப்டன்! தரமான சம்பவம்தான்... ஆனா பொறுப்பும் அதிகமாகியிருக்கு... மனம் திறந்த கேப்டன்!

சச்சின் டெண்டுல்கர் ஒரு படி மேலே சென்று சான்டா கிளாசாகவே மாறி, தன்னுடைய ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

வாழ்த்துக்கள் பகிர்வு

வாழ்த்துக்கள் பகிர்வு

கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று சர்வதேச அளவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கிறிஸ்துவ மக்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்தும் பரிசுகளை அளித்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

ரசிகர்களுக்கு வாழ்த்து

ரசிகர்களுக்கு வாழ்த்து

கிறிஸ்துமசையொட்டி முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் சான்டா கிளாசாகவே மாறி தனது ரசிகர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். மேலும் இந்த பண்டிகை ஒன்றாக இருப்பது மற்றும் பகிர்வதை குறிப்பிடுவதாகவும் அவர் தனது கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.

டிவிட்டர் மூலம் வாழ்த்து

டிவிட்டர் மூலம் வாழ்த்து

இதேபோல முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மன் இந்த நாளில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவும் தனது வாழ்த்துக்களை டிவிட்டர் பக்கத்தின்மூலம் பகிர்ந்துள்ளார்.

குடும்பத்தை மிஸ் செய்வதாக பதிவு

குடும்பத்தை மிஸ் செய்வதாக பதிவு

வரும் ஆண்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி, திருப்தி உள்ளிட்டவை கிடைக்க வேண்டும் என்று ரெய்னா வாழ்த்தியுள்ளார். இதனிடையே, ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா, தன்னுடைய கிறிஸ்துமஸ் வாழ்த்தை பகிர்ந்ததுடன், தனது மனைவி மற்றும் மகளின் புகைப்படத்தை வெளியிட்டு அவர்களை மிஸ் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Friday, December 25, 2020, 15:35 [IST]
Other articles published on Dec 25, 2020
English summary
Opening batsman Rohit Sharma also wishes for Christmas
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X