For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஜித் அகர்கருக்கு தன்னுடைய க்ளவுசை பரிசாக கொடுத்த சச்சின் டெண்டுல்கர்

டெல்லி : அடுத்த சச்சின் டெண்டுல்கர் என்று பாராட்டப்பட்ட அஜித் அகர்கருக்கு காலம் கைகொடுக்கவில்லை. தன்னுடைய கேரியரை பேட்ஸ்மேனாக துவக்கி, பின்பு பௌலராக தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியவர் இவர்.

தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை பார்த்து முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனக்கு அவருடைய க்ளவுசை பரிசாக அளித்ததாக அகர்கர் தற்போது தன்னுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவின் ஆகாஷ்வாணி ஷோவிற்காக பேசிய அகர்கர், தான் சச்சின் டெண்டுல்கரின் பாதையை பின்பற்றியிருந்தால், இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

கடைசி நேரத்தில் சச்சின் சொன்ன ஐடியா.. ஒப்புக் கொண்ட தோனி.. 2011 உலகக்கோப்பை பைனல் பரபரப்பு!கடைசி நேரத்தில் சச்சின் சொன்ன ஐடியா.. ஒப்புக் கொண்ட தோனி.. 2011 உலகக்கோப்பை பைனல் பரபரப்பு!

வேகப்பந்து வீச்சாளர்

வேகப்பந்து வீச்சாளர்

வேகப்பந்து வீச்சாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அஜித் அகர்கர், சிறந்த பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தவர். இவர் ஒருநாள் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்பதுடன் 3 அரைசதங்களையும் அடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் ஆடிய இவர் 109 ரன்களை குவித்து அனைவரது புருவங்களையும் உயரச் செய்தார்.

சச்சினுடன் கூட படித்தவர்

சச்சினுடன் கூட படித்தவர்

முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பள்ளியில் படித்தவர் என்ற பெருமை அஜித் அகர்கருக்கு உண்டு. இதேபோல சச்சினை போலவே பயிற்சியாளர் ராமகந்த் ஆச்ரேகரின்கீழ் பயிற்சி பெற்றவர் அகர்கர். 42 வயதாகும் அகர்கர், முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவின் ஆகாஷ்வாணி யூடியூப் ஷோவில் பங்கேற்று தன்னுடைய பல்வேறு மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

ரசிகர்களின் புகழாரம்

ரசிகர்களின் புகழாரம்

ராமகந்த் ஆச்ரேகரின் அகாடமியில் இருந்து வெளிவந்து சிறப்பாக விளையாடிய அகர்கரை அடுத்த டெண்டுல்கர் என்று ரசிகர்கள் அப்போது பெயரிட்டனர். அவர் தொடர்ந்து சிறப்பான ரன் குவிப்பில் ஈடுபட்டதால் அந்த பெயர் அவருக்கு கிடைத்தது. முதலில் பேட்டிங்கிலேயே கவனம் செலுத்திய அகர்கர், பின்பு பௌலிங்கில் சிறப்பாக செயல்பட்டதையும் வெளிப்படுத்தியுள்ளார்.

Recommended Video

Dale Steyn controversial remarks on Sachin double Ton
சச்சினை தொடர்ந்திருக்கலாம்

சச்சினை தொடர்ந்திருக்கலாம்

அஜித் அகர்கரின் சிறப்பான ஆட்டத்தை பார்த்து, சச்சின் டெண்டுல்கர், அவருக்கு தனது க்ளவுசை பரிசாக அளித்ததையும் அவர் பகிர்ந்து கொண்டார். அப்போது அவரை தான் முழுமையாக அறியாமல் இருந்ததாகவும், அவரை தான் சரியாக தொடர வில்லை என்றும் அகர்கர் கூறியுள்ளார். அவரை முழுமையாக பின்பற்றி ஆடியிருந்தால், தான் இன்னும் சிறப்பான பேட்ஸ்மேனாக வந்திருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, May 17, 2020, 12:31 [IST]
Other articles published on May 17, 2020
English summary
When Sachin Tendulkar gave Ajit Agarkar his gloves
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X