For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்ட் ரேட்டிங்: பத்து இடத்திற்குள் இந்திய பேட்ஸ்மேன்கள் மிஸ்சிங்! அஸ்வின், ஜடேஜா கலக்கல்

By Veera Kumar

சென்னை: டெஸ்ட் கிரிக்கெட் ரேட்டிங்கில் டாப்-10 இடங்களில், எந்த ஒரு இந்திய பேட்ஸ்மேனுக்கும் இடம் கிடைக்காத நிலையில், பவுலர்கள் ரேட்டிங்கில், அஸ்வின் 2வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

ஐசிசி டெஸ்ட் ரேட்டிங்கை இன்று வெளியிட்டுள்ளது. அதில் டாப்-10 இடங்களில் எந்த ஒரு இந்திய பேட்ஸ்மேனும் இடம்பெறவில்லை.

டெஸ்ட் தர வரிசையில், தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் 2வது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தை நியூசிலாந்தின் கனே வில்லியம்சன் பிடித்துள்ளார். முதலிடம் இங்கிலாந்தின் ரூட்டுக்கு கிடைத்துள்ளது.

பாகிஸ்தான் ஆதிக்கம்

பாகிஸ்தான் ஆதிக்கம்

ஆஸ்திரேலியாவின் ஸ்மித், வார்னர், பாகிஸ்தானின் யூனிஸ்கான், இலங்கையின் மேத்யூஸ், தென் ஆப்பிரிக்காவின் ஆம்லா, இங்கிலாந்தின் குக், பாகிஸ்தானின் மிஸ்பா உல்ஹக் ஆகியோர் முறையே 4வது முதல் 10வது இடங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

முதலிடத்தில் ஸ்டெயின்

முதலிடத்தில் ஸ்டெயின்

டெஸ்ட் பவுலர் ரேட்டிங்கில், தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் முதலிடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்தின் ஆன்டர்சன், பாகி்ஸதானின் யாசிர் ஷா, இங்கிலாந்தின் பிராட், நியூசிலாந்தின் டிரென்ட் பவுல்ட், ஆஸ்திரேலியாவின் ஹசில்வுட் ஆகியோர் முறையே, 3வது முதல், 7வது இடத்தை பிடித்துள்ளனர்.

இந்திய ஸ்பின்னர்கள்

இந்திய ஸ்பின்னர்கள்

இந்தியாவின் முன்னணி ஸ்பின்னர் அஸ்வின் 2வது இடம் பிடித்து அசத்தியுள்ளார். ஸ்டெயினுக்கும் இவருக்கும் நடுவே 4 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. 8வது இடத்தில், மற்றொரு இந்திய ஸ்பின்னர் ஜடேஜா 789 புள்ளிகளுடன் உள்ளார்.

ஆறுதல் இடங்கள்

ஆறுதல் இடங்கள்

அதே நேரம் ஆறுதல் அளிக்கும் விதமாக, இந்தியாவின் ரஹானே 11வது இடத்திலும், கோஹ்லி 14வது இடத்திலும் உள்ளனர். முரளி விஜய் 17வது இடத்திலும், புஜாரா 19வது இடத்திலும் உள்ளனர்.

Story first published: Tuesday, December 15, 2015, 15:33 [IST]
Other articles published on Dec 15, 2015
English summary
Ravichandran Ashwin held on to his top spot, while Ravindra Jadeja rose a rung to be fifth in the all-rounders' chart of the latest ICC Test rankings issued today. However, no Indian found a place in the top-10 of batsmen's rankings even though Ashwin (2nd) and Jadeja (8th) represented the country in the bowlers' list.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X