For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எனக்கு தேவையில்லாத பாராட்ட கொடுக்காதீங்க... வீரர்களுக்குதான் பாராட்டு போகணும்... டிராவிட் கலகல!

டெல்லி : கடந்த வாரம் நடந்து முடிந்துள்ள இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டுள்ளது. இந்த வெற்றியை அணியின் இளம் வீரர்கள் சாத்தியப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அன்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணிகளின் கோச்சாக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட்டே இளம் வீரர்களின் இந்த செயல்பாட்டிற்கு காரணம் என பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றன.

என்ன நினைச்சு இப்படி பண்றாங்கன்னே தெரியலையே.. கூடாரத்தை காலி செய்த மும்பை இந்தியன்ஸ்.. செம பிளான்!என்ன நினைச்சு இப்படி பண்றாங்கன்னே தெரியலையே.. கூடாரத்தை காலி செய்த மும்பை இந்தியன்ஸ்.. செம பிளான்!

இதனிடையே, தேவையில்லாத பாராட்டை தனக்கு கொடுக்க வேண்டாம் என்றம் வீரர்களுக்கே பாராட்டு சென்று சேர வேண்டும் என்றும் ராகுல் டிராவிட் தெரிவிததுள்ளார்.

டெஸ்ட் தொடர் வெற்றி

டெஸ்ட் தொடர் வெற்றி

இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி கொண்டுள்ளது. மூத்த வீரர்கள் காயம் காரணமாக அணியிலிருந்து விலகிய நிலையில், இளம் வீரர்களை அதிகமாக கொண்ட இந்திய அணி இந்த வெற்றிச் சாதனையை படைத்துள்ளது.

குறைவான அனுபவம்

குறைவான அனுபவம்

குறைவான அனுபவமே கொண்ட இளம் வீரர்கள் இந்த சாதனையை மேற்கொண்ட நிலையில், அவர்களுக்கு மனவலிமையை அன்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணியின் கோச் ராகுல் டிராவிட் வழங்கியதாக அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இளம் வீரர்கள் சாதனை

இளம் வீரர்கள் சாதனை

முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பந்த், ஷர்துல் தாக்கூர் உள்ளிட்ட இளம் வீரர்கள் கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் வியப்பிற்குரிய பங்களிப்பை அளித்துள்ளனர். இதற்கும் மேலாக அந்த தொடரில்தான் தங்களது அறிமுக ஆட்டங்களை சிராஜ் உள்ளிட்டவர்கள் ஆடினர்.

தனக்கு பாராட்டு வேண்டாம்

தனக்கு பாராட்டு வேண்டாம்

அன்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணியில் உள்ள வீரர்களுக்கு சிறப்பான பயிற்சிகளை தொடர்ந்து அளித்து வருகிறார் ராகுல் டிராவிட். இந்நிலையில் இளம் வீரர்களுக்கே அனைத்து பாராட்டுக்களும் சென்றடைய வேண்டும் என்றும் தேவையில்லாமல் தனக்கு பாராட்டை அளிக்க வேண்டாம் என்றும் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, January 24, 2021, 15:43 [IST]
Other articles published on Jan 24, 2021
English summary
Former skipper Rahul Dravid has praised Team India for its better performance against Aussies and said that he is getting unnecessary credit for the team's victory.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X