For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வாழ்க்கையை ரொம்ப கஷ்டமாக்கியிருக்காங்க... ஆனா விளையாடறது ஈஸியா இருக்கு... கோலி பாராட்டு யாருக்கு?

அகமதாபாத் : இந்திய வீரர்களிலேயே தன்னுடைய உடல்மீதும் அதன் வலிமை மீதும் மிகுந்த விருப்பம் கொண்டவர்களில் முதன்மையானவர் விராட் கோலி.

லாக்டவுன் காலங்களிலும் தன்னுடைய வீட்டின் ஜிம்மிலேயே சிறப்பான பல பயிற்சிகளை மேற்கொண்டு அதை புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் வெளியிட்டு வந்தார் விராட்.

மொத்தமே 6 ஓவர்கள்தான்..4வது டெஸ்டில் இருந்து விலகும் பும்ரா..ஒன்றை மட்டும் கற்றுக்கொண்டதாக கருத்து மொத்தமே 6 ஓவர்கள்தான்..4வது டெஸ்டில் இருந்து விலகும் பும்ரா..ஒன்றை மட்டும் கற்றுக்கொண்டதாக கருத்து

இந்நிலையில் தன்னுடைய வாழ்க்கையை மிகவும் கடினமானதாக மாற்றியவர்கள் குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

இறுதி டெஸ்ட் போட்டி

இறுதி டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் 4வது மற்றும் இறுதிப்போட்டி நாளை மறுநாள் துவங்கி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

பயிற்சிகளில் ஈடுபாடு

பயிற்சிகளில் ஈடுபாடு

எப்போதும் வலிமையான உடல் மற்றும் பிட்னசில் அதிக ஈடுபாடு கொண்டவர் விராட் கோலி. கொரோனா தாக்கம் அதிகமாக இருந்த காலங்களிலும் அவர் தன்னுடைய வீட்டிலேய அதிகமான பிட்னஸ் பயிற்சிகளில் ஈடுபட்டு பிட்னசை சிறப்பாக பராமரித்தார்.

விராட் கோலி வெளிப்படை

விராட் கோலி வெளிப்படை

இந்நிலையில் ஜிம்மில் தன்னுடைய வாழ்க்கையை மிகவும் கடினமாக மாற்றியவர்கள் குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் வலிமை மற்றும் கண்டீஷனிங் பயிற்சியாளர்கள் நிக் வெப் மற்றும் சோஹம் தேசாய் இருவருடன் தான் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் கோலி.

மைதானத்தில் எளிமை

மைதானத்தில் எளிமை

அவர்கள் இருவரும் ஜிம்மில் தனது வாழ்க்கையை கடினமானதாகவும் மைதானத்தில் சிறப்பானதாகவும் மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனிடையே நாளை மறுநாள் துவங்கவுள்ள டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிரா அல்லது வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளதால் இந்திய வீரர்கள் தொடர் வலைபயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Story first published: Tuesday, March 2, 2021, 13:16 [IST]
Other articles published on Mar 2, 2021
English summary
Virat Kohli shared a picture with Team India's strength and conditioning coaches
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X