கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!

டெல்லி : எந்த நிலையிலும் சிறப்பாக பொறுமையுடன் கையாண்ட கேப்டன்கள் குறித்த வாக்கெடுப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் ஐசிசி மேற்கொண்டது.

இந்த கூல் கஸ்டமர் வாக்கெடுப்பில் ஸ்டீவ் வா, மிஸ்பா உல் ஹக், எம்எஸ் தோனி மற்றும் கேன் வில்லியம்சனின் பெயர்கள் இடம்பெற்றன.

இந்நிலையில் 71.5 சதவிகித வாக்குகளுடன் முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி இந்த வாக்கெடுப்பில் முன்னிலை பெற்றுள்ளார்.

கேப்டன் கூல்

கேப்டன் கூல்

இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தனது பொறுமை மற்றும் அமைதியான செயல்பாட்டால் அனைவரையும் கவர்ந்தவர். எந்த சூழ்நிலையிலும் தனது பொறுமையை விட்டுக் கொடுக்காமல் நெருக்கடி நேரத்திலும் அணியை சிறப்பாக வழிநடத்தி கேப்டன் கூல் என்ற பட்டத்துடன் வலம் வந்தவர் எம்எஸ் தோனி.

ஐபிஎல்லில் பங்கேற்பு

ஐபிஎல்லில் பங்கேற்பு

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்து இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் அனைத்து ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளித்தார் எம்எஸ் தோனி. தொடர்ந்து ஐபிஎல் 2020 தொடரில் பங்கேற்று தனது சிஎஸ்கே அணியை வழிநடத்திய தோனி தற்போது 2021 ஐபிஎல் தொடரிலும் அணியை வழிநடத்தவுள்ளார்.

முதலிடத்தில் எம்எஸ் தோனி

இதனிடையே ஐசிசி தனது டிவிட்டர் பக்கத்தில் நடத்திய கூல் கஸ்டமர் வாக்கெடுப்பில் 71.5 சதவிகித வாக்குகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார் தோனி. இந்த வாக்கெடுப்பில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வா, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் தோனி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

71.5 சதவிகித வாக்குகள்

இந்நிலையில் தோனி இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். ஸ்டீவ் வா 1.9 % வாக்குகளையும் மிஸ்பா உல் ஹக் 9.8% வாக்குகளையும் கேன் வில்லியம்சன் 16.8% வாக்குகளையும் பெற்ற நிலையில் தோனி 71.5 % வாக்குகளை பெற்று அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
MS Dhoni wons the Cool Customer with the most Votes conducted by ICC
Story first published: Wednesday, January 27, 2021, 20:13 [IST]
Other articles published on Jan 27, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X