For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

WATCH: இரவு 10 மணி..! கதவை தட்டி சந்திரசேகரிடம் சான்ஸ் கேட்ட தல தோனி..!! உணர்ச்சிகர வீடியோ..!

சென்னை: மறைந்த முன்னாள் தேர்வுக்குழு தலைவர் வி.பி சந்திரசேகரின் அறை கதவை கட்டி, இரவு 10 மணிக்கு தல தோனி வாய்ப்பு கேட்ட சம்பவம், இப்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவராக மறைந்த வி.பி.சந்திரசேகர் செயல்பட்டுள்ளார். அப்போது அவருக்கும் முன்னாள் கேப்டன் தோனிக்கும் இடையிலான ஒரு சுவாரஸ்ய சம்பவம் தற்போது நினைவு கூரப்பட்டு வருகிறது.

அதில் தோனியுடனான தனது முதல் நினைவலையை சந்திரசேகர் பகிர்ந்திருந்தார். தோனியுடனான முதல் சந்திப்பு குறித்து, தோனி அப்போது என்ன பேசினார் என்பது குறித்து அழகாக விவரித்திருக்கிறார். தோனி தன்னை மிகவும் கோபப்படுத்தியதாக வி.பி.சந்திரசேகர் குறிப்பிட்டிருந்தார்.

தோனியுடன் சந்திப்பு

அந்தப் பேட்டியில் வி.பி.சந்திரசேகர் கூறி இருப்பதாவது: இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவராக இருந்தபோது ஐதராபாத்தில் தோனியை முதன் முறையாக சந்தித்தேன். பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ஏ அணியில் இடம் பெற்றிருந்தார் தோனி.

வரவே இல்லை தோனி

வரவே இல்லை தோனி

ஆனால், போட்டி நடக்கும் முந்தைய நாள் இரவு வரை அவர் வரவே இல்லை. பலமுறை தொடர்புகொள்ள முயன்றும் என்னால் முடியவில்லை. தெரிந்தவர்களிடமும் விசாரித்தேன். எந்த பலனும் இல்லை.

நீண்ட தலைமுடியுடன் தோனி

நீண்ட தலைமுடியுடன் தோனி

அதனால் எனக்கு கடுமையான கோபம் வந்தது. கிட்டத்தட்ட இரவு 10 மணி அளவில் எனது ஓட்டல் அறை கதவு தட்டப்பட்டது. உணவு பரிமாறுபவர் வந்திருப்பார் என நினைத்து கதவை திறந்தேன். அப்போது நீண்ட தலைமுடியுடன் ஒருவர் நின்றிருந்தார்.

யார் என்று விசாரித்தேன்

யார் என்று விசாரித்தேன்

நான் தோனியை அதற்கு முன்னர் கண்டதில்லை, அவரது புகைப்படத்தையும் பார்த்தது இல்லை. எனவே, யார் என்று விசாரித்தேன். அப்போது தனக்கே உரிய அமைதியுடன், நான் தான் மகேந்திர சிங் தோனி என்று சிறு புன்னகையுடன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

கூலாக பேசிய தோனி

கூலாக பேசிய தோனி

ஆனால், கோபம் தீராத நான், தற்போது 10 மணியாகிவிட்டது. ஏன் இதுவரை வர வில்லை என்று கேள்வி எழுப்பினேன். ஆனால், நான் தான் வந்துவிட்டேனே என்று ரொம்ப கூலாக என்னிடம் கூறினார். அன்று முதல் ஒவ்வொரு நாளும் அவர் தன்னை வளர்த்துக்கொண்டார். தோனி எனும் புதிய வரலாறு தொடங்கியது என்று தெரிவித்தார்.

வீட்டில் தற்கொலை

வீட்டில் தற்கொலை

முன்னதாக, வி.பி. சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லையே அதற்கு காரணம் என்று கூறப்பட்டது. இறுதி அஞ்சலிக்காக, வி.பி.சந்திரசேகர் உடல், சென்னை, விஸ்வேசபுரத்தில் உள்ள அவரது வீட்டில், வைக்கப்பட்டிருந்தது.

பலர் அஞ்சலி

பலர் அஞ்சலி

உடலுக்கு, உறவினர்கள், நண்பர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீகாந்த், ராகுல் டிராவிட், சிவராமகிருஷ்ணன், சடகோபன் ரமேஷ், டபிள்யு.வி.ராமன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். முரளி விஜய், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் உள்ளிட்ட பல வீரர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். சமூக வலை தளங்களிலும், பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.

Story first published: Saturday, August 17, 2019, 19:59 [IST]
Other articles published on Aug 17, 2019
English summary
The first meeting with dhoni and late v.b. Chandrasekhar goes viral.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X