For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதிக சம்பளம் பெறும் நம்பர்.1 கேப்டன்.. கோலி இல்ல - இவருக்கா இவ்ளோ சம்பளம்?

மும்பை: அதிகம் சம்பளம் பெறும் கிரிக்கெட் கேப்டன்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த லிஸ்ட் நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றது.

Recommended Video

Dhoni பெற்ற பெரிய தொகை! MS Dhoni: The Untold Story ரகசியம் | OneIndia Tamil

விளையாட்டு ஊதியம், விளம்பரம், சந்தை மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை உள்ளடக்கி உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் யார் என்ற பட்டியல் வருடா வருடம் வெளியாகும்.

'Forbes' இந்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த லிஸ்டின் முதல் 10 இடங்களில் பெரும்பாலும் கிரிக்கெட் வீரர்கள் இருக்க வாய்ப்பில்லை. கால்பந்து, டென்னிஸ், கூடைப்பந்து போன்ற உலகம் முழுவதும் பரவலாக விளையாடப்படும் விளையாட்டுகளின் வீரர்களுக்கே அப்படியான அந்தஸ்து கிடைக்கும். எனினும், டாப் 100 இடங்களில், எப்போதாவது கிரிக்கெட் வீரர்கள் இடம் பிடிப்பார்கள்.

 10வது இடம்

10வது இடம்

அந்த வகையில், உலகில் அதிகம் வருமானம் ஈட்டும் கிரிக்கெட் கேப்டன்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இது Forbes பட்டியல் கிடையாது. Wion இந்த லிஸ்டை வெளியிட்டுள்ளது. அதன்படி உலகில் அதிகம் வருமானம் பெறும் 10வது வீரராக இடம் பிடித்திருப்பவர், இலங்கை லிமிட்டட் ஓவர்ஸ் அணியின் கேப்டன் குசல் பெரேரா. இவரது ஆண்டு வருமானம் கேப்டனாக ரூ.25 லட்சம்.

 பாபர் அசம்

பாபர் அசம்

ஒன்பதாவது இடத்தில், இலங்கை டெஸ்ட் அணியின் கேப்டன் டிமுத் கருணரத்னே இடம்பிடித்துள்ளார். அவரது ஆண்டு வருமானம் ரூ.51 லட்சம். எட்டாவது இடத்தில் பாகிஸ்தான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் பாபர் அசம் இருக்கிறார். இவரது ஆண்டு வருமானம் 62.4 லட்சம். சமீபத்தில், ஐசிசி தரவரிசையில், கோலியை பின்னுக்குத் தள்ளி பாபர் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

 கைரன் பொல்லார்ட்

கைரன் பொல்லார்ட்

ஏழாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கேப்டன் கிரெய்க் பிரத்வெயிட் உள்ளார். இவரது ஆண்டு வருமானம் 1.3 கோடி. ஆறாவது இடத்தில், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் மோர்கன், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கைரன் பொல்லார்ட் ஆகியோர் உள்ளனர். இவர்களின் ஆண்டு வருமானம் 1.7 கோடி.

 டீன் எல்கர்

டீன் எல்கர்

தென்னாப்பிரிக்க அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் டெம்பா பவுமா 2.5 கோடி ஆண்டு வருமானத்துடன் ஐந்தாவது இடத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டன் டீன் எல்கர் 3.2 கோடி ஆண்டு வருமானத்துடன் நான்காவது இடம் பிடிக்கிறார்

 ஜோ ரூட்

ஜோ ரூட்

ஆஸ்திரேலிய கேப்டன்களான ஆரோன் ஃபின்ச், டிம் பெய்ன் ஆகியோர் தலா 4.8 கோடி வருமானத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர். இந்திய கேப்டன் விராட் கோலி, 7 கோடி ரூபாய் ஆண்டு வருமானத்துடன் இரண்டாம் இடம் பிடிக்க, இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட் 8.9 கோடி ஆண்டு வருமானத்துடன் முதலிடம் பிடித்துள்ளார்.

Story first published: Monday, May 24, 2021, 16:00 [IST]
Other articles published on May 24, 2021
English summary
The Highest Paid Captain In World Cricket - விராட் கோலி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X