For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலககோப்பை பைனலில் தோற்றபிறகு.. ஆஸ்திரேலிய அணியை வெகுவாக பாராட்டிய கேன் வில்லியம்சன்!

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 'டி20 உலகக்கோப்பை 2021' உலககோப்பையை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றி விட்டது. எந்தவித எதிர்பார்ப்புமின்றி இறுதிப்போட்டி வரை வந்து விட்ட நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் நேற்று மோதின.

முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை குவித்தது. அணிக்காக தனி நபராக போராடிய நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் வெறும் 48 பந்துகளில் 85 ரன்கள் குவித்தார்.

அந்த 3 போட்டிகள்..சர்ச்சை, பரபரப்பு, சுவாரஸ்யம்.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இடையே உள்ள பங்காளி பகைஅந்த 3 போட்டிகள்..சர்ச்சை, பரபரப்பு, சுவாரஸ்யம்.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இடையே உள்ள பங்காளி பகை

நியூசிலாந்து கனவு கலைந்தது

நியூசிலாந்து கனவு கலைந்தது

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி எந்தவித தடுமாற்றமும் இன்றி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டி பிடித்தது. நியூசிலாந்து அணி இதுவரை எந்த ஒரு ஐ.சி.சி கோப்பையையும் வென்றதில்லை. இந்த முறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நியூசிலாந்து கனவு கலைந்து போனது. இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் தோல்வி குறித்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியதாவது:-

விளையாட்டில் இது சகஜம்

விளையாட்டில் இது சகஜம்

நாங்கள் இந்த தொடரில் விளையாடிய விதம், எங்களின் முயற்சிகள் குறித்து மிகவும் பெருமைப்படுகிறோம். நீங்கள் நன்றாக விளையாடி இறுதிப்போட்டிக்கு வருகிறீர்கள். ஆனால் எதுவும் நடக்கலாம். வெற்றியும் கிடைக்கும், தோல்வியும் கிடைக்கும். விளையாட்டில் இது சகஜம். போட்டி மொத்தமாக அணியின் வீர்ர்கள் வெற்றி பெற கடுமையாக உழைத்தனர். துரதிர்ஷ்டவசமாக எங்களால் பல வாய்ப்புகளை உருவாக்கி அந்த முன்னேற்றங்களைப் பெற முடியவில்லை.

இதுதான் முதல் உலகக் கோப்பை

இதுதான் முதல் உலகக் கோப்பை

ஆஸ்திரேலிய அணி இலக்கை திட்டமிட்டு துரத்தியது. அவர்கள் ஒரு அங்குலம் வாய்ப்பு கூட எங்களுக்கு கொடுக்கவில்லை. ஆஸ்திரேலியா மிகச்சிறந்த அணி. இந்த வெற்றியை பெறுவதற்கு அவர்கள் முற்றிலும் தகுதியானவர்கள். இளைய வீரர்களின் அடிப்படையில், அவர்களில் பலர், உலகக் கோப்பையில் எங்கள் அணியில் இளம் வீர்கள் பலருக்கு இதுதான் முதல் உலகக் கோப்பையாகும்.

நெருக்கடியை எளிதாக சமாளித்தார்கள்

நெருக்கடியை எளிதாக சமாளித்தார்கள்

ஆனாலும் அவர்கள் நெருக்கடியை எளிதாக சமாளித்தார்கள். இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு நல்ல அனுபவம் கிடைத்திருக்கும். இது அணியின் எதிர்கால வளர்ச்சிக்கு மேலும் உதவிகரமாக இருக்கும். முதல் 10 ஓவர்களில் பிட்ச் கடினமாக இருந்ததால் அதிக ரன்கள் எடுக்க முடியவில்லை. ஆனால் போக, போக ஆடுகளம் பேட்டிங்கிற்கு முழுமையாக ஒத்துழைத்தது. இதனால் கடைசி 10 ஓவர்களில் அதிக ரன்கள் சேர்க்க முடிந்தது. இவ்வாறு கேன் வில்லியம்சன் தெரிவித்தார்.

Story first published: Tuesday, November 16, 2021, 0:16 [IST]
Other articles published on Nov 16, 2021
English summary
The way we played in this series, we are very proud of our efforts. There will be success and there will be failure. New Zealand captain Kane Williamson said it was normal in the game
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X