வேற லெவல் பீலிங்... ரொம்ப என்ஜாய் பண்றேன்... எதனால கிறிஸ் வோக்ஸ் இப்படி சொல்றாரு?

மும்பை : இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்துள்ளார் இங்கிலாந்து பௌலர் கிறிஸ் வோக்ஸ்.

கடந்த சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் 3 ஓவர்களை போட்டு 18 ரன்களை கொடுத்த அவர் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

அடுத்தடுத்த முக்கியமான வீரர்கள் இல்லாத ராஜஸ்தான் அணி... சோதனையில இருந்து தப்பிச்சு வெற்றி பெறுமா?

இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் புது மாதிரியான பீலிங் ஏற்படுவதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சிறப்பான வெற்றி

சிறப்பான வெற்றி

ஐபிஎல் 2021 தொடர் கடந்த 9ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்துள்ளார் இங்கிலாந்து பௌலர் கிறிஸ் வோக்ஸ். கடந்த சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.

சிறப்பான பௌலிங்

சிறப்பான பௌலிங்

இந்த போட்டியில் அணியில் புதிதாக இணைந்துள்ள கிறிஸ் வோக்ஸ் 3 ஓவர்களை வீசி, 18 ரன்களை கொடுத்திருந்தார். மேலும் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணிக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார். தொடர்ந்து இந்த சீசனில் டெல்லி அணியில் அவரது பங்களிப்பு சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வோக்ஸ் உற்சாகம்

வோக்ஸ் உற்சாகம்

இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் குடும்பம் போன்ற ஒரு உணர்வு ஏற்படுவதாக வோக்ஸ் உற்சாகம் தெரிவித்துள்ளார். புதிய அணியுடன் பயணத்தை துவங்கியுள்ளது சிறப்பாக உள்ளதாகவும் ஐபிஎல்லில் சில அணிகளுடன் தான் விளையாடியுள்ளதாகவும் ஆனால் இத்தகைய உணர்வு இதுவரை ஏற்பட்டதில்லை என்றும் கூறியுள்ளார்.

தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது

தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது

டெல்லி கேபிடல்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள வோக்ஸ், அதிகமான போட்டிகள் உள்ள நிலையில் ஐபிஎல் தொடரை வெற்றியுடன் துவக்கியுள்ளது சிறப்பானது என்றும் கூறியுள்ளார். இதன்மூலம் சிறப்பான தன்னம்பிக்கை உருவாகியுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையுடன் வீரர்கள்

நம்பிக்கையுடன் வீரர்கள்

இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளதாகவும் தொடர்ந்து ஆர்வத்துடன் தங்களுடைய பயணத்தை தொடர உள்ளதாகவும் அணியில் உள்ள அனைவரும் நம்பிக்கையுடன் உள்ளதாகவும் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட ஆர்வத்துடன் காத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Everyone in the group is confident and looking forward to the next few games -Woakes
Story first published: Thursday, April 15, 2021, 19:04 [IST]
Other articles published on Apr 15, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X