மட்டு மரியாதை இல்லாம நடத்தி.. இப்படி அவமானப்படுத்தக் கூடாது.. மனவருத்தத்தை கொட்டிய வாசிம் அக்ரம்!

Wasim Akram Tweets | விமான நிலைய சோதனைக்கு மனவருத்தத்தை கொட்டிய வாசிம் அக்ரம்!- வீடியோ

மான்செஸ்டர் : பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சு ஜாம்பவான் வாசிம் அக்ரம் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகர விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

மான்செஸ்டர் விமான நிலையத்தில் தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து வாசிம் அக்ரம் ட்விட்டரில் பதிவிட்டு தன் மனக்குமுறலை கொட்டி இருந்தார்.

அதைத் தொடர்ந்து அந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்து பதிவிட்டுள்ளார்.

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி

வாசிம் அக்ரமிற்கு சர்க்கரை வியாதி உள்ளது. அதனுடனேயே அவர் கிரிக்கெட் விளையாடி வந்தார். தற்போது ஓய்வு பெற்ற பின் கிரிக்கெட் வர்ணனை செய்து வரும் அக்ரம், இப்போதும் குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் இன்சுலின் மருந்து எடுத்துக் கொள்வது வழக்கம். இது பலருக்கும் தெரிந்த விஷயம் தான்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்த நிலையில் வாசிம் அக்ரம் மான்செஸ்டர் விமான நிலையத்தில் அதிகாரிகளின் சோதனைக்கு உள்ளாகி இருக்கிறார். அப்போது அக்ரம் ஒரு குளிர்சாதன வசதி கொண்ட பையில் வைத்திருந்த இன்சுலின் மருந்தை வெளியே எடுக்கச் சொல்லி, அதை ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்து கொடுத்துள்ளனர்.

அதிர்ச்சிப் பதிவு

இந்த சோதனையின் போது தான் நடத்தப்பட்ட விதம், முக்கியமான இன்சுலின் மருந்து என்றும் பாராமல் அதை பாதுகாப்பின்றி பிளாஸ்டிக் பையில் அடைத்தது குறித்து ட்விட்டரில் அதிர்ச்சிப் பதிவிட்டு இருந்தார் வாசிம் அக்ரம். மோசமாக கேள்வி கேட்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

மீண்டும் விளக்கம்

சில மணி நேரம் கழித்து மீண்டும் ட்விட்டரில் பதிவிட்ட வாசிம் அக்ரம், தான் வித்தியாசமாக நடத்தப்படவில்லை என்றாலும், பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை அவமானப்படுத்தக் கூடாது. அந்த நடவடிக்கைகளில் ஒரு அக்கறை இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

அதிகாரிகள் தொடர்பு

அதிகாரிகள் தொடர்பு

வாசிம் அக்ரமின் இந்த இரண்டு பதிவுகளின் கீழும் மான்செஸ்டர் விமான நிலைய ட்விட்டர் கணக்கில் இருந்து எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள் என கேட்டு இருக்கிறார்கள். என்ன நடந்தது என கூறுங்கள், நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என கேட்டு இருக்கிறார்கள். வாசிம் அக்ரம் அவர்களை தொடர்பு கொண்டாரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Wasim Akram humiliated at Manchester airport for carrying InsulinWasim Akram humiliated at Manchester airport for carrying Insulin
Story first published: Wednesday, July 24, 2019, 10:39 [IST]
Other articles published on Jul 24, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X