For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாடி நரம்பெல்லாம் சிக்ஸர் வெறி.. இவங்க வந்தாலே தாறுமாறுதான்!

மும்பை : டி20 போட்டிகளின் வரவுக்கு பின் கிரிக்கெட்டில் சிக்ஸர்களின் எண்ணிக்கையும் பல மடங்காக உயர்ந்தது.

Recommended Video

7 players hit most sixes in an ODI innings

குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸ் அடிக்கப்படுவது அதிகரித்தது.

அப்படி ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்களை பற்றித் தான் பார்க்கப் போகிறோம்.

சிக்ஸ் அடிக்காமல் தடுத்து ஆடிய தோனி.. குத்திக் காட்டிய முன்னாள் பாக். வீரர்.. வெடித்த சர்ச்சை!சிக்ஸ் அடிக்காமல் தடுத்து ஆடிய தோனி.. குத்திக் காட்டிய முன்னாள் பாக். வீரர்.. வெடித்த சர்ச்சை!

இங்கிலாந்து கேப்டன்

இங்கிலாந்து கேப்டன்

2019 உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து ஒருநாள் அணியின் கேப்டன் இயான் மார்கன், அதே உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை புரட்டி எடுத்தார். அந்தப் போட்டியில் 17 சிக்ஸர்கள் அடித்த அவர் 71 பந்துகளில் 148 ரன்கள் குவித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் அது யாராலும் முறியடிக்க முடியாத சாதனையாக உள்ளது.

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

ஹிட்மேன் எனப்படும் ரோஹித் சர்மா ஒருநாள் அரங்கில் தன் முதல் இரட்டை சதத்தை அடித்த போட்டியில் 16 சிக்ஸர்கள் அடித்து இருந்தார். 2013இல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அவர் இந்த சாதனையை செய்து இருந்தார்.

ஏபி டிவில்லியர்ஸ்

ஏபி டிவில்லியர்ஸ்

தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி மன்னன் ஏபி டிவில்லியர்ஸ்-உம் ஒரே ஒருநாள் போட்டியில் 16 சிக்ஸர்கள் அடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 31 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை செய்த போது அவர் இந்த சிக்ஸர் சாதனையையும் செய்தார்.

கிறிஸ் கெயில்

கிறிஸ் கெயில்

சிக்ஸர் மன்னன் என்றே அறியப்படும் கிறிஸ் கெயில் 2015இல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 215 ரன்கள் குவித்தார். அந்தப் போட்டியில் அவர் 16 சிக்ஸர்கள் அடித்து இருந்தார். ரோஹித் சர்மா, டிவில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெயில் மூவரும் 16 சிக்ஸர்கள் அடித்து இரண்டாம் இடத்தில் உள்ளனர்.

ஷேன் வாட்சன்

ஷேன் வாட்சன்

முன்னாள் ஆஸ்திரேலிய அணி வீரர் ஷேன் வாட்சன் 2011இல் வங்கதேச அணிக்கு வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 96 பந்துகளில் 185 ரன்கள் குவித்தார். அப்போது 15 சிக்ஸர்கள் அடித்து வங்கதேச பந்துவீச்சை துவம்சம் செய்து இருந்தார்.

கோரி ஆண்டர்சன்

கோரி ஆண்டர்சன்

நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் 2014இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 36 பந்துகளில் சதம் அடித்து சாதனை செய்து இருந்தார். 47 பந்துகளில் 131 ரன்கள் குவித்த அவர் 14 சிக்ஸர்கள் அடித்து இருந்தார்.

மீண்டும் கெயில்

மீண்டும் கெயில்

ஆம், கிறிஸ் கெயில் மற்றொரு போட்டியில் 14 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 2019இல் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 97 பந்துகளில் 162 ரன்கள் குவித்த கெயில் 14 சிக்ஸர்கள் அடித்து தெறிக்க விட்டிருந்தார். அந்த தொடருடன் கெயில் ஓய்வு பெறுவதாக அப்போது கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திசாரா பெரேரா

திசாரா பெரேரா

இலங்கை அணியின் அதிரடி ஆல் - ரவுண்டர் திசாரா பெரேரா நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 320 ரன்களை சேஸிங் செய்த போது 74 பந்துகளில் 140 ரன்கள் குவித்தார். அந்தப் போட்டியில்அவர் 13 சிக்ஸர்கள் அடித்து இருந்தார்.

Story first published: Wednesday, June 3, 2020, 20:21 [IST]
Other articles published on Jun 3, 2020
English summary
These 7 players hit most sixes in an ODI innings. This list includes Eoin Morgan, Rohit Sharma, Chris Gayle, AB de Villiers, Shane Watson and more.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X