For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த இளம் வீரர்களுக்கு தான் வெ.இண்டீஸ் தொடரில் வாய்ப்பு.. தலைகீழாகப் போகும் இந்திய அணி!

மும்பை : இந்திய அணி அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.

அந்த தொடருக்கான அணியில் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற பல வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

2௦20 டி20 உலகக்கோப்பை மற்றும் 2023 50 ஓவர் உலகக்கோப்பை ஆகியவற்றுக்கு புதிய இந்திய அணியை தயார் செய்யும் முயற்சியாக இது அமையும் என கருதப்படுகிறது.

காயம் மற்றும் ஓய்வு

காயம் மற்றும் ஓய்வு

உலகக்கோப்பை அணியில் இடம் பெற்ற வீரர்களில் விராட் கோலி, பும்ராவுக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு அளிக்கப்பட உள்ளது. இது தவிர தொடரின் இடையே காயமடைந்த தவான், விஜய் ஷங்கர், ஹர்திக் பண்டியா, புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்படும். தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ் ஆகியோர் சுமாரான செயல்பாடுகளால் அணியில் தங்கள் இடத்தை இழக்க அதிக வாய்ப்பு உள்ளது.

டாப் ஆர்டரில் மாற்றமில்லை

டாப் ஆர்டரில் மாற்றமில்லை

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி செல்ல உள்ளது. அதனால், அவர் அணியில் நிச்சயம் துவக்க வீரராக இடம் பெறுவார் என்பதில் சந்தேகமில்லை. ராகுலும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்பார் என்பதால் டாப் ஆர்டரில் மாற்றமில்லை. எனினும், சில போட்டிகளில் ராகுலுக்கு ஓய்வு அளித்து விட்டு மயங்க் அகர்வாலுக்கு அணியில் துவக்க வீரராக வாய்ப்பு கிடைக்கலாம்.

இளம் பேட்ஸ்மேன்கள்

இளம் பேட்ஸ்மேன்கள்

கோலி இல்லாத நிலையில், மூன்றாம் இடத்தில் இளம் வீரர் ஷுப்மன் கில் களமிறங்குவார். மிடில் ஆர்டரில் மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெறுவார்கள். இவர்களுடன் விக்கெட் கீப்பராக களமிறங்க உள்ள ரிஷப் பந்த்தும் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வார்.

சுழற் பந்துவீச்சாளர்கள்

சுழற் பந்துவீச்சாளர்கள்

உலகக்கோப்பை தொடரில் பட்டையைக் கிளப்பிய ஜடேஜாவுக்கு கடந்த ஆண்டில் அதிக வாய்ப்பு வழங்காமல் இருந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அனுபவ வீரராக நிச்சயம் அணியில் இடம் பெறுவார் என்கிறார்கள். அவருடன் சாஹல், அக்சர் பட்டேல் அல்லது க்ருனால் பண்டியா அணியில் இடம் பெறுவார்கள்.

வேகப் பந்துவீச்சாளர்கள்

வேகப் பந்துவீச்சாளர்கள்

உலகக்கோப்பை தொடரில் சரியாக வாய்ப்பு பெறாத முகமது ஷமி, இளம் பந்துவீச்சாளர்கள் கலீல் அஹ்மது, நவ்தீப் சைனி மற்றும் தீபக் சாஹர் அணியில் இடம் பெறுவார்கள். இவர்களில் ஒரு சிலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். ஆனால், இந்த இளம் வீரர்களில் பலருக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. மூத்த வீரர்கள் அதிகம் இல்லாத இளம் வீரர்கள் அதிகம் கொண்ட தலைகீழ் அணி தான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடப் போகிறது.

Story first published: Wednesday, July 17, 2019, 18:09 [IST]
Other articles published on Jul 17, 2019
English summary
These Youngsters will get chance in Indian team during West Indies series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X