For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செமயா பயந்துட்டேன்.. இந்திய வீரர்களின் அதிரடி அட்டாக்.. அரண்டு போன ஆஸி. வீரர்.. உண்மைக் கதை!

சிட்னி : பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலை கண்டு தான் பயந்து விட்டதாக ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஹாரிஸ் தற்போது கூறி இருக்கிறார்.

Recommended Video

The Test stories: Marcus Harris recalls fear of Perth test

இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தான் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் வேகப் பந்துவீச்சை கண்டு மிரள்வார்கள்.

ஆனால், ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணி பேட்ஸ்மேன் ஒருவரையே மிரள வைத்தது இந்திய அணியின் வேகப் பந்துவீச்சு கூட்டணி.

சுழற் பந்துவீச்சு மட்டும் இல்லை

சுழற் பந்துவீச்சு மட்டும் இல்லை

இந்திய அணி என்றாலே சுழற் பந்துவீச்சு என்ற ஒரு பேச்சு உண்டு. ஆனால், சமீப காலங்களில் அது உடைந்து விட்டது. குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில்பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா என மூவர் கூட்டணி அணியில் இருந்தால் எந்த அணியையும் திணற வைத்து விடுவார்கள்.

விக்கெட் வேட்டை

விக்கெட் வேட்டை

இவர்களின் எழுச்சியால் தான் இந்தியா பல வெளிநாட்டு தொடர்களில் சிறப்பாக ஆடி விக்கெட் வேட்டை நடத்த முடிந்தது. முதன் முறையாக . ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைக்க முடிந்தது.

வெப் சீரிஸ்

வெப் சீரிஸ்

அந்த தொடரில் நடந்த சம்பவங்கள் பற்றி ஆஸ்திரேலிய அணியினர் "தி டெஸ்ட்" என்ற அமேசான் வெப் சீரிஸ் ஒன்றில் கூறி வருகின்றனர். மற்ற வீரர்கள், பயிற்சியாளர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்த நிலையில், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மார்க்ஸ் ஹாரிஸ் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

ஆஸ்திரேலிய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அந்த தொடரின் இரண்டாவது போட்டி பெர்த்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணி முழு அளவில் வேகப் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

முதல் டெஸ்ட் போட்டியில் 70 ரன்கள் எடுத்த மார்கஸ் ஹாரிஸ், இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஆரோன் பின்ச் உடன் சேர்ந்து ரன் குவிக்க முயன்றார். பின்ச் கையில் காயம் ஏற்பட்டு ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார்.

ஹெல்மட் தாக்குதல்

ஹெல்மட் தாக்குதல்

மார்கஸ் ஹாரிஸ் ஹெல்மட்டில் ஒரு முறை பந்து பலமாக தாக்கியது. அதன் பின் அவர் இந்திய அணியின் தாக்குதலை சந்திக்க அஞ்சினார். இது பற்றி அந்த பேட்டியில் அவர் கூறி இருக்கிறார். களத்திற்கு நடுவில் நிற்க தான் அஞ்சியதாக கூறி இருக்கிறார்.

பயமாக இருந்தது

பயமாக இருந்தது

"நான் பயந்து இருந்தேன். இந்திய வேகப் பந்துவீச்சாளர்களின் தாக்குதலை, பெர்த் போன்ற ஆடுகளத்தில் சந்திப்பது மிகவும் பயத்துக்கு உரியது. டிவியில் அதைப் பார்க்க நன்றாக இருக்கலாம். ஆனால், களத்தில் நடுவே நிற்க பயமாக இருந்தது" என்றார்.

நம்பிக்கை இழந்த அணி

நம்பிக்கை இழந்த அணி

அந்த தாக்குதல் பாணி பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி அப்போது நம்பிக்கை இழந்ததாகவும், எந்த பந்தை அடிப்பது, எந்த பந்தை விடுவது என ஆஸ்திரேலிய வீரர்கள் தெரியாமல் குழம்பியதாகவும் தெரிவித்தார். குறிப்பாக பும்ரா, ஷமி வீசிய பவுன்சர்கள் ஆஸ்திரேலிய அணியை பேக் ஃபுட்டில் ஆட வைத்தது.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

அந்த தொடரை இந்தியா 2 - 1 என கைப்பற்றி வரலாறு படைத்தது. இதற்கு முன் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றதில்லை. அதை முறியடித்து வெற்றி பெற்று இருந்தது. அந்த தொடரில் பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோர் வெற்றியில் பெரும் பங்கு வகித்தனர்.

Story first published: Friday, March 20, 2020, 20:24 [IST]
Other articles published on Mar 20, 2020
English summary
This australian batsmen scared to face Indian bowling attack in Perth test in 2018-19.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X