For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பேச வந்த ஜாம்பவான்.. முகத்தை திருப்பிக் கொண்ட டிராவிட்.. திட்டம் போட்டு கவிழ்த்த கேப்டன் கங்குலி!

மும்பை : 2002ஆம் ஆண்டு இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்த டெஸ்ட் தொடரில் பிரையன் லாராவை வீழ்த்த இந்திய அணி வியூகம் அமைத்தது.

பொதுவாக சிறந்த பேட்ஸ்மேன்களை வீழ்த்த எப்படி பந்து வீசலாம் என திட்டம் போடுவார்கள்.

ஆனால், அந்த தொடரில் கேப்டன் கங்குலியின் தலைமையில் வேறு மாதிரி திட்டம் போட்டு அவரை ரன் குவிக்க விடாமல் செய்தது இந்திய அணி.

நாங்க ஜெயிக்க மாட்டோமா? இப்ப என்ன சொல்றீங்க.. ஆஸி.வை ஊருக்கு அனுப்பி வைத்த யுவி.. தரமான சம்பவம்நாங்க ஜெயிக்க மாட்டோமா? இப்ப என்ன சொல்றீங்க.. ஆஸி.வை ஊருக்கு அனுப்பி வைத்த யுவி.. தரமான சம்பவம்

முக்கிய வெற்றிகள்

முக்கிய வெற்றிகள்

2000மாவது ஆண்டில் கேப்டனாக கங்குலி இந்திய அணியை வளர்த்து வந்தார். ஆனால், 2002இல் தான் இந்திய அணி அதன் பலனை அனுபவித்தது. அந்த ஆண்டில் தொடர்ந்து பல்வேறு முக்கிய வெற்றிகளை பெற்றது இந்திய அணி.

தொடர் வெற்றிகள்

தொடர் வெற்றிகள்

2002 நாட்வெஸ்ட் தொடர் வெற்றி, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சமன், சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் வெற்றியை இலங்கை அணியுடன் பகிர்ந்து கொண்டது என வரிசையாக வெற்றிகளை குவித்து முன்னேறி வந்தது இந்திய அணி.

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்

அடுத்து பிரையன் லாராவின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவர்கள் சொந்த மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடச் சென்றது இந்திய அணி. அந்த தொடரில் இந்திய அணி 2 - 1 என தோல்வி அடைந்தாலும், இந்திய அணி ஒரு குழுவாக சிறப்பாக செயல்பட்டு இருந்தது.

லாராவின் பலவீனம்

லாராவின் பலவீனம்

அந்த தொடரில் சிறந்த பேட்ஸ்மேன் ஆன பிரையன் லாராவை ரன் குவிக்க விடாமல் கட்டுப்படுத்த வேண்டும் என திட்டம் தீட்டினார் கேப்டன் கங்குலி. அப்போது பிரையன் லாராவின் பலவீனம் பேச்சு தான் என முடிவு செய்தது இந்திய அணி.

திட்டம் தயார்

திட்டம் தயார்

பிரையன் லாரா டெஸ்ட் போட்டிகளில் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய வேண்டும் என்ற நிலையில், எதிரணி வீரர்களுடன் பேச்சுக் கொடுப்பார். அவருடன் பேசவில்லை என்றால் அவர் சோர்ந்து போய் ஆட்டமிழந்து சென்று விடுவார் என திட்டம் தயார் ஆனது.

எடுபடுமா?

எடுபடுமா?

இது போன்ற திட்டம் எல்லாம் எடுபடுமா? ஆனால், பிரையன் லாரா விஷயத்தில் இது வேலை செய்தது. அந்த தொடரில், தீப் தாஸ்குப்தா இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்தார். அவர் அப்போது என்ன நடந்தது என சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

பேச மறுத்த டிராவிட்

பேச மறுத்த டிராவிட்

அப்போது பிரையன் லாரா விக்கெட் கீப்பரான தன்னிடமும், ஸ்லிப்பில் நின்று இருந்த ராகுல் டிராவிட் உடனும் பேச முயற்சி செய்துள்ளார். லாரா எப்போது தன்னிடம் பேச வந்தாலும் டிராவிட் முகத்தை திருப்பிக் கொண்டு அவருடன் பேசாமல் சமாளித்துள்ளார்.

திணறிய லாரா

திணறிய லாரா

தீப் தாஸ்குப்தாவும் அவருடன் பேசாமல் இருந்துள்ளார். அது உண்மையில் வேலை செய்தது. பிரையன் லாரா அந்த தொடரில் 7 இன்னிங்க்ஸில் 202 ரன்கள் மட்டுமே எடுத்தார். முன்னணி பேட்ஸ்மேனை பேட்டிங்கை தாண்டி அவரது பலவீனத்தை கண்டுபிடித்து வீழ்த்தியது கங்குலியின் அணி.

Story first published: Saturday, June 20, 2020, 10:37 [IST]
Other articles published on Jun 20, 2020
English summary
Ganguly, Dravid controlled Brian Lara in 2002 test series by not talking to him. And this works well as he failed to score big in that tournament.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X