For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

208.... இறுதிப் போட்டியில் இது ஒரு சாதனை பாஸ்!

பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் நேற்று முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எடுத்த 208 ரன்கள்தான், இதுவரை நடந்த இறுதிப் போட்டிகளில் முதலில் பேட் செய்த அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும்.

அந்த வகையில் நேற்றைய ஹைதராபாத் அணியின் பேட்டிங் சாதனை படைத்து விட்டது. வார்னரின் அதிரடி, யுவராஜ் சிங்கின் திடீர் அடி, கட்டிங்கின் கேமியோ ஆகியவை சேர்ந்து ஹைதராபாத் அணியை சாதனை ஸ்கோருக்குக் கொண்டு செல்ல உதவியது.

ஹைதராபாத் அணி ஆரம்பத்தில் விளையாடியதைப் பார்த்தபோது 250 ரன்கள் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென இடையில் சொதப்பினர். இதனால் 200 ரன்களைத் தொடுமா என்ற சந்தேகம் வந்தது. ஆனால் கட்டிங் வந்து கை கொடுத்து தூக்கிக் கொண்டு போய் 200 ரன்களுக்கு அப்பால் விட்டு விட்டார்.

வார்னர் அதிரடி

வார்னர் அதிரடி

கேப்டன் வார்னர் வழக்கம் போல அதிரடி காட்டினார். 38 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 69 ரன்களைக் குவித்தார். இதில், 3 சிக்ஸர்களும், 8 பவுண்டரிகளும் அடக்கம்.

ஷிகர் தவான்

ஷிகர் தவான்

ஷிகர் தவான் பெரிய அளவில் ஆட எத்தனித்தார். ஆனால் அவரை சஹல் வீ்ழ்த்தி நிறுத்தினார். 25 பந்துகளில் 28 ரன்களில் நின்று போனார் ஷிகர்.

சொதப்பிய ஹென்டிரிக்ஸ்

சொதப்பிய ஹென்டிரிக்ஸ்

ஹென்டிரிக்ஸ் அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

யுவராஜ் சிங்கின் ஜில்லாக்கி ஆட்டம்

யுவராஜ் சிங்கின் ஜில்லாக்கி ஆட்டம்

பழம்பெரும் வீரர் யுவராஜ் சிங் சற்றே வான வேடிக்கை காட்டினார். 23 பந்துகளைச் சந்தித்த அவர் அழகாக 38 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடக்கம்.

கட்டிங்கின் ஜில்லாடி ஆட்டம்

கட்டிங்கின் ஜில்லாடி ஆட்டம்

ஆனால் கடைசி நேரத்தில் கட்டிங் கலக்கி விட்டார். 1 5 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் அதி வேகமாக ஆடி 39 ரன்களைக் குவித்து கண்ணிமைக்கும் நேரத்தில் 200 ரன்களைத் தாண்டிக் கொண்டு போய் விட்டார்.

இறுதிப் போட்டியில் இது சாதனை

இறுதிப் போட்டியில் இது சாதனை

இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த அணி 200 ரன்களைத் தாண்டி எடுத்தது ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் இது சாதனையும் ஆகும்.

Story first published: Monday, May 30, 2016, 10:52 [IST]
Other articles published on May 30, 2016
English summary
This is the highest ever score by a team batting first in an IPL final. It was little-known Cutting who smashed 39 off 15 balls with three boundaries and four sixes to take the Sunrisers past 200-run mark.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X