For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியை இனிமே டீம்ல சேர்க்க இது ஒண்ணுதான் வழி…! ஆனா, இவங்க 2 பேரும் மனசு வைக்கணும்…!

மும்பை: இந்திய அணியில் மீண்டும் தோனி விளையாட வேண்டுமானால், கோலியும், அணி நிர்வாகமும் அவர் மீண்டும் ஆட வேண்டும் என்று முடிவு எடுத்தால் வரலாம் என்று முன்னாள் கேப்டன் கங்குலி சொல்லியிருப்பது பெரும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியில் பல சாதனைகள், வெற்றிகளுக்கு சொந்தக்காரர் தல தோனி. ஆனால் தற்போது அவரது நிலைமையோ படு பாதாளத்தில் இருக்கிறது. காரணம், உலக கோப்பைக்கு பிறகு எந்த தொடரிலும் அவர் இல்லை.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தோனி இல்லை. அணியில் எடுக்க மாட்டார்கள் என்பதை முன்பே ஊகித்து அவர் ராணுவ பயிற்சிக்கு சென்று விட்டார் என்று கூறப்பட்டது. அந்த பயிற்சியையும் முடித்து விட்டார்.

பூம் பூம் பும்ராவின் செம ஹாட்ரிக் சாதனை.. பெரிய உதவி செய்த கோலி.. மேஜிக் மாதிரி இருந்துச்சு!பூம் பூம் பும்ராவின் செம ஹாட்ரிக் சாதனை.. பெரிய உதவி செய்த கோலி.. மேஜிக் மாதிரி இருந்துச்சு!

கசியும் தகவல்கள்

கசியும் தகவல்கள்

அதன் பிறகு, தென் ஆப்ரிக்கா தொடரிலும் அவர் இல்லை. காரணம், எப்போது டி 20 அணியை வலுவாக்குகிறீர்களோ அப்போது எனது ஓய்வை அறிவிப்பேன் என்று தோனி கூறியதாக பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல்கள் கசியவிடப்பட்டன.

எது உண்மை?

எது உண்மை?

ஆனால் எது உண்மை என்று தெரியவில்லை. ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிகிறது. தோனியை இனி, அணியில் செலக்ட் செய்யக் கூடாது என்பதில் கோலியும், ரவி சாஸ்திரியும் உறுதியாக இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதிர்ச்சி கருத்து

அதிர்ச்சி கருத்து

இந் நிலையில் தோனி பற்றி மீண்டும் வாய்திறந்திருக்கிறார் தாதா கங்குலி. ஆனால் இம்முறை அவர் கூறி இருப்பதாவது கொஞ்சம் ஹைவோல்டேஜ் போன்று அதிர்ச்சி ரகம். அவர் கூறியது இதுதான்:

அந்த காலகட்டம்

அந்த காலகட்டம்

ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் ஒரு காலக்கட்டம் வரும், அது மாரடோனா, சாம்பிராஸ் அல்லது டெண்டுல்கர், தோனி என்று யாராக இருந்தாலும் சரி. அந்த வயதை எட்டும்போது இந்த நிலை வரும். கோலியும் அணி நிர்வாகமும் தோனி வந்து மீண்டும் ஆட வேண்டும் என்று முடிவு எடுத்தால் அவர் வந்து ஆடலாம்.

பங்கு உண்டு

பங்கு உண்டு

இந்த விவகாரத்தில் அணி தேர்வாளர்களும் முக்கிய பங்கு வகிப்பார்கள். என்னை பொறுத்தவரை தோனியிடம், கோலி என்ன சொல்லப்போகிறார் என்பதே முக்கியம். தோனியிடம் அவர் எதிர் பார்ப்பது என்ன? அது பற்றி தெரியாது... அதை பற்றி கூறுவதும் கடினம்.

தெரியாது

தெரியாது

ஆனால் யாரும் உடனடியாக தோனியின் ஓய்வு பற்றி இஷ்டத்துக்கு கருத்து சொல்ல முடியாது.தோனி, அணி நிர்வாகம், தேர்வு குழுவினர் இடையே என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது? தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை மதிப்பிட வேண்டிய தருணத்தில் தோனி இருக்கிறார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

நாட்டுக்காக இனி போட்டிகளை ஜெயித்து கொடுக்க முடியுமா என அவர் முடிவு செய்ய வேண்டும். ஒருவேளை தொடரவேண்டும் என்று நினைத்தால் தோனி போன்று அவர் விளையாட வேண்டும். மற்றவர்களை போல் அல்ல. தோனி, கோலி, சச்சின் போன்ற நட்சத்திர வீரர்கள் களத்தில் விளையாடும் வரை வெற்றியை தேடித் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு எப்போதும் ரசிகர்களுக்கு இருக்கும் என்றார்.

Story first published: Sunday, September 1, 2019, 11:26 [IST]
Other articles published on Sep 1, 2019
English summary
This is the only way for Dhoni to get into team 11 says former Ganguly.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X