For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கன்பார்ம்..! இந்த முறை ஆஷஸ் கோப்பை அந்த அணிக்கு தான்..! முன்னாள் கேப்டன் ஓபன் டாக்

லண்டன்: இந்த முறை ஆஸி.க்கு தான் ஆஷஸ் கோப்பை என்று முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் இயான் சாப்பல் கூறியிருக்கிறார்.

ஆஷஸ் டெஸ்டில் எட்ஜ்பாஸ்டன் போட்டியில் 122/8 என்ற நிலையில் ஸ்டீவ் ஸ்மித் சதம் எடுத்ததோடு 2வது இன்னிங்சிலும் சதம் எடுத்தார். மேத்யூ வேடும் அதிரடி சதம் எடுத்தார். நாதன் லயன் 2வது இன்னிங்சில் விக்கெட்டுகளை அள்ளி குவிக்க, ஆஸ்திரேலியாவிடம் இங்கிலாந்து தோல்வி கண்டது.

அடுத்த டெஸ்ட் லார்ட்சில் நடக்கிறது. 2000த்திலிருந்து 6 போட்டிகளில் லார்ட்சில் ஆஸ்திரேலியா 4ல் வென்றிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் இயன் சாப்பல், 18 ஆண்டுகளில் இங்கிலாந்தை அதன் சொந்த் மண்ணில் வீழ்த்தும் வாய்ப்பை ஆஸ்திரேலியா ஒருபோதும் தவறவிடாது என்கிறார்.

பெரிய தலைவலி

பெரிய தலைவலி

அவர் மேலும் கூறியதாவது: ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி அவுட் ஆக்குவது என்பது தான் இங்கிலாந்துக்கு இருக்கும் மிகப் பெரிய தலைவலி. 5க்கு பூஜ்யம் என்ற கணக்கில் ஆஸி. வெல்லும்.

தோல்வியால் நொறுக்கம்

தோல்வியால் நொறுக்கம்

முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து தோல்வி கண்டால் விரைவில் உடைந்து நொறுங்கி விடுவார்கள் என்று இந்தத் தொடர் தொடங்கும் முன்பே கூறினேன். இங்கிலாந்து டெஸ்ட் அணியில் 4 ஒருநாள் வீரர்கள் உள்ளனர்.

அழுத்தம் தேவையில்லை

அழுத்தம் தேவையில்லை

ஆனாலும் ஒருநாள் ஆடி ஆட்டத்தை காப்பாற்ற முடியவில்லை. ஸ்டீவ் ஸ்மித்திற்கு சரியான லெந்தில் வீச முடியவில்லை. 2வது டெஸ்ட் போட்டியில் எந்த அழுத்தத்துக்கும் இடம் கொடுக்காமல் இங்கிலாந்து அணியை தேர்வு செய்ய வேண்டும்.

நானாக இருந்தால் வேறு

நானாக இருந்தால் வேறு

ஒரு வேளை இங்கிலாந்து அணிக்கான வீரர்கள் தேர்வில் நான் இருந்தால் எனது செலக்ஷனே வேறு. ஆட்டத்துக்கு எந்த ஸ்பின்னரும் தேவையில்லை என்று முடிவெடுப்பேன். சாம் கரன், ஜோப்ரா ஆர்ச்சரைத்தான் ஆடும் லெவனில் தேர்வு செய்வேன் என்றார்.

Story first published: Tuesday, August 13, 2019, 11:52 [IST]
Other articles published on Aug 13, 2019
English summary
This time Australia will win ashes series says former captain Ian chappell.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X