For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி 'கேலி' செய்தார்.. திருப்பிக் கொடுத்தேன்.. பட், அவரே நம்பர்.1 - ஆஸி., கேப்டன்

சிட்னி: உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி தான் என்று ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் புகழாரம் சூட்டியுள்ளார்.

சச்சின், கங்குலி காலத்தில் தான் இந்திய அணி உலக அரங்கில் அனைத்து சர்வதேச அணிகளையும் வீழ்த்தும் வல்லமை பெற்ற அணியாக வலம் வந்தது. வெற்றிகளும் வசப்பட்டது. ஆனால், அந்த வெற்றியில் கன்சிஸ்டன்சி இல்லை. அதுதான் பிரச்சனை.

வெறும் '31' ஐபிஎல் மேட்ச்.. நடத்தாம விட்டா.. பிசிசிஐ பாக்கெட்டில் '2500' கோடி காலி!வெறும் '31' ஐபிஎல் மேட்ச்.. நடத்தாம விட்டா.. பிசிசிஐ பாக்கெட்டில் '2500' கோடி காலி!

தோனி கேப்டனான பிறகு, கன்சிஸ்டன்சி வந்து ஒட்டிக் கொண்டாலும், சிங்கத்தை அதன் குகையில் வைத்தே கைமா செய்ய முடியவில்லை. ஆஸ்திரேலியாவை அதன் மண்ணில் வைத்து டெஸ்ட் தொடரில் வீழ்த்துவது என்பது இந்திய அணியின் பெருங்கனவாக இருந்தது.

சரணடைந்த ஆஸ்திரேலியா

சரணடைந்த ஆஸ்திரேலியா

அது, விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் சாத்தியமானது. 2018-19ல் நடந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2 - 1 என்று வெற்றிப் பெற்று சரித்திரம் படைத்தது. அதேபோல், 2020-21 தொடரிலும், 2-1 என்று இந்தியா தொடரை இரண்டாவது முறையாக கைப்பற்றியது. இதில், இந்தியா தோல்வி அடைந்த முதல் போட்டியைத் தவிர்த்து, மீதமிருந்த 3 போட்டிகளுக்கும் ரஹானே கேப்டனாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. கோலி சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பியிருந்தார்.

பெஸ்ட் பேட்ஸ்மேன்

பெஸ்ட் பேட்ஸ்மேன்

இந்நிலையில், இவ்விரு டெஸ்ட் தொடர்களுக்கும் ஆஸ்திரேலிய கேப்டனாக இருந்தது டிம் பெய்ன் தான். அவர் விராட் கோலி குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில், "விராட் கோலியைப் பொறுத்தவரை, நான் பலமுறை கூறியுள்ளேன், உங்கள் அணியில் அவரைப் போன்ற ஒரு வீரர் இருக்க வேண்டும் என்று நீங்கள் எப்போதும் விரும்புவீர்கள். அவர் கடும் சவால் அளிக்கக் கூடியவர், உலகின் சிறந்த பேட்ஸ்மேனும் கூட. அவருக்கு எதிராக விளையாடுவது சவாலானது. ஆனால், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவருடன் எனக்கு மோதல் ஏற்பட்டது. எனினும், நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் வீரர் அவர்" என்றார்.

கோலி vs பெய்ன்

கோலி vs பெய்ன்

கடந்த 2018-19 சீசனில் பெர்த்தில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது, கோலி - பெய்ன் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. அவர்கள் பேசியது மைக்கில் கூட பதிவானது. இரு அணி கேப்டன்களும், விக்கெட்டுகள் வீழும் போது, தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதை ரசிகர்கள் எவரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இது என் முறை

இது என் முறை

இதுகுறித்து பெய்ன் மேலும் கூறுகையில், "கோலி எங்கள் வீரர்கள் அவுட்டாகி செல்லும் போது, ஆக்ரோஷமாக அவர்களை அனுப்பிவைத்தார். இதனால் நான், எனது அணியினருக்காக நிற்க வேண்டும் என்று நினைத்தேன். எனவே தான் இந்திய வீரர்கள் அவுட்டாகும் போது, 'இது என் முறை, இப்போது நான் திருப்பிக் கொடுக்க வேண்டும்' என்று எண்ணினேன்" என்று பெர்த் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

Story first published: Monday, May 17, 2021, 14:02 [IST]
Other articles published on May 17, 2021
English summary
Paine hails Kohli as best batsman in world' - விராட் கோலி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X