For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோல்விக்கு காரணம் டிஆர்எஸ்-ம், ஸ்டார்க்-ம் தான்.. பூசி மெழுகும் ஆஸ்திரேலிய கேப்டன்

அடிலெய்டு : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் தான் தோல்விக்கு காரணம் என கூறலாம். அந்த அளவிற்கு இந்த போட்டியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு டிஆர்எஸ் ரிவ்யூ முறை மற்றும் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆகியோரை போகிற போக்கில் காரணம் காட்டியுள்ளார் அந்த அணியின் கேப்டன் டிம் பெய்ன்.

போராடி தோற்ற ஆஸி

போராடி தோற்ற ஆஸி

முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு இரண்டாம் இன்னிங்க்ஸில் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா. அதை எட்ட முடியாத ஆஸ்திரேலிய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணியில் பின் வரிசை பேட்ஸ்மேன்கள் மட்டுமே கடைசி நேரத்தில் வெற்றிக்காக போராடினர்.

டிஆர்எஸ் தப்பா இருக்கு

டிஆர்எஸ் தப்பா இருக்கு

இந்த தோல்வி பற்றி பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன், "டிஆர்எஸ் முறை சரியான முறையல்ல. அதில் எனக்கு பதில்கள் கிடைக்கவில்லை. அது மிகவும் ஏமாற்றமாக உள்ளது. எல்லோருக்குமே அப்படி தான் இருக்கும் என நினைக்கிறேன்" என கூறினார். முதல் டெஸ்டில் சில டிஆர்எஸ் முடிவுகள் தவறாக சென்றதை குறிப்பிட்டு இப்படி கூறினார்.

மிட்செல் ஸ்டார்க் சொதப்பல்

மிட்செல் ஸ்டார்க் சொதப்பல்

அடுத்து மிட்செல் ஸ்டார்க் பக்கம் திரும்பினார். மிட்செல் ஸ்டார்க் தனது சிறப்பான ஆட்டத்தை சமீப காலமாக வெளிப்படுத்துவதில்லை. எனினும், அவரது வேலையே அவர் செய்தார் என நேரடியாக குறிப்பிடாமல் ஸ்டார்க்கும் தோல்விக்கு ஒரு காரணம் என குறிப்பிட்டார் டிம்.

ஸ்டார்க் மேல் நம்பிக்கை இருக்கு

ஸ்டார்க் மேல் நம்பிக்கை இருக்கு

இரண்டாம் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள பெர்த் மைதானம் வேகப் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என கூறப்படுவதால், ஸ்டார்க் அங்கே சிறப்பாக பந்துவீசுவார் என தனக்கு நம்பிக்கை இருப்பதாக குறிப்பிட்டார் டிம் பெய்ன்.

Story first published: Wednesday, December 12, 2018, 18:22 [IST]
Other articles published on Dec 12, 2018
English summary
Tim paine list out the reasons for Adelaide test failure, blaming Mitchell Starc
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X