For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவருக்கு தகுதி இல்லை.. இந்தியாவை சீண்டி எதிர்காலத்தை இழந்த ஆஸி. கேப்டன்.. விரைவில் நீக்கம்?

சிட்னி: இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மோசமாக ஆடிய காரணத்தாலும் கடுமையான விமர்சனங்களை சந்தித்த காரணத்தாலும் ஆஸி. கேப்டன் டிம் பெயின் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி இன்னும் சில நாட்களில் நடக்க உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் எப்டியாவது வெற்றிபெற்று பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்க வைக்க இந்தியா முடிவெடுத்துள்ளது. அதேபோல் இந்தியாவை வீழ்த்தி பார்டர் கவாஸ்கர் கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் ஆஸி. கேப்டன் டிம் பெயின் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டிம் பெயின் நடந்து கொண்ட விதம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது. அதன்படி டிம் பெயின் இந்திய வீரர்களை மிக மோசமாக ஸ்லெட்ஜ் செய்தார். அஸ்வின் போன்ற வீரர்களை கெட்ட வார்த்தையில் திட்டினார்.

மோசம்

மோசம்

இதுமட்டுமின்றி மற்ற ஆஸி. வீரர்கள் ஸ்லெட்ஜ் செய்யவும் டிம் பெயின் அனுமதித்தார்.காலில் அடிபட்டு இருந்த இந்திய வீரர் விஹாரியை மேத்யூ வேட் தொடர்ந்து காலிலேயே பந்தை வைத்து தாக்கினார். ஆனால் டிம் பெயின் ஒரு கேப்டனாக இதை தடுக்கவே இல்லை.

தடுக்கவில்லை

தடுக்கவில்லை

ஒரு பக்கம் இவர் கேப்டனாக சரியாக நடக்கவில்லை. இன்னொரு பக்கம் பேட்ஸ்மேனாக ஆஸ்திரேலியா அணிக்கு உதவவில்லை. அதேபோல் கீப்பராகவும் 3 கேட்ச்கள் வரை டிம் பெயின் தவறவிட்டார். கடந்த போட்டியில் இவரின் கீப்பிங் மிக மோசமாக இருந்தது. அதேபோல் இவர் பீல்டிங் நிற்க வைத்த முறையும் மிகவும் மோசமாக இருந்தது.

பீல்டிங்

பீல்டிங்

இதெல்லாம் போக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 2 இந்திய பேட்ஸ்மேன்கள் காயம் அடைந்த போது கூட அவர்களின் விக்கெட்டை எடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி திணறியது. இதற்கு டிம் பெயினின் மோசமான கேப்டன்சிதான் காரணம் என்று கூறுகிறார்கள். இவருக்கு கேப்டனாக இருக்க தகுதி இல்லை என்று கூறுகிறார்கள்.

நீக்கம்

நீக்கம்

ஆஸ்திரேலியா அணியின் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டு பின் அந்த இடத்தை பிடித்துக்கொண்டவர்தான் டிம் பெயின். இந்த நிலையில் தற்போது அவர் மோசமாக கேப்டன்சி செய்யும் நிலையில் அவரை நீக்கும் முடிவில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் உள்ளது என்கிறார்கள். மார்னஸ் அல்லது வேறு யாரையாவது கேப்டனாக நியமிக்கலாம் என்று ஆஸ்திரேலிய வாரியம் திட்டமிட்டு வருகிறது .

Story first published: Wednesday, January 13, 2021, 11:12 [IST]
Other articles published on Jan 13, 2021
English summary
Tim Paine may be removed as Australia captain soon after the Border Gavaskar Cup series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X