For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா தொடரை வெற்றி பெறுவதற்கான நேரம் இது... கங்குலி நம்பிக்கையா சொல்லியிருக்காரு!

கொல்கத்தா : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்ற நிலையில், போட்டி டிரா ஆகியுள்ளது.

இந்த போட்டியில் சத்தீஸ்வா புஜாரா, ரிஷப் பந்த், ஹனுமா விஹாரி மற்றும் ரவி அஸ்வின் ஆகியோர் மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளனர்.

டிரெஸ்ஸிங் ரூமில் நடந்த சம்பவம்.. ஆஸி.யின் வெற்றி திட்டத்தை வீழ்த்தியது எப்படி.. அஸ்வின் மாஸ் பேட்டிடிரெஸ்ஸிங் ரூமில் நடந்த சம்பவம்.. ஆஸி.யின் வெற்றி திட்டத்தை வீழ்த்தியது எப்படி.. அஸ்வின் மாஸ் பேட்டி

இந்நிலையில் இந்தியா வெற்றி பெறுவதற்கான நேரம் வந்துள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

டிரா ஆன 3வது டெஸ்ட்

டிரா ஆன 3வது டெஸ்ட்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில், போட்டி டிரா ஆகியுள்ளது. 5 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றுள்ள இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய வீரர்கள் சத்தீஸ்வர் புஜாரா, ரிஷப் பந்த், ஹனுமா விஹாரி மற்றும் ரவி அஸ்வின் ஆகியோர் மிகச்சிறந்த பங்களிப் அளித்துள்ளனர்.

பந்த் -புஜாரா பார்ட்னர்ஷிப்

பந்த் -புஜாரா பார்ட்னர்ஷிப்

இரண்டாவது இன்னிங்சில் 407 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடியது இந்திய அணி. 100 ரன்களுக்கே 3 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் களமிறங்கிய ரிஷப் பந்த் மற்றும் சத்தீஸ்வர் புஜாரா சிறப்பாக விளையாடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை மேற்கொண்டனர்.

டிரா செய்ய போராட்டம்

டிரா செய்ய போராட்டம்

பந்த் 97 ரன்களும் புஜாரா 77 ரன்களும் என அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதையடுத்து ஆஸ்திரேலியாவிற்கு அதிகமாக இருந்த வெற்றி வாய்ப்பு படிப்படியாக குறைந்து போட்டி சமனாவதற்கான வாய்ப்பு அதிகரித்தது. இதையடுத்து ஹனுமா விஹாரி மற்றும் ரவி அஸ்வின் இருவரும் போட்டியை டிரா செய்ய பெரிதும் போராடி அதை சாத்தியப்படுத்தினர்.

சவுரவ் கங்குலி நம்பிக்கை

சவுரவ் கங்குலி நம்பிக்கை

இந்நிலையில் இந்த தொடரை கைப்பற்றுவதற்கான நேரம் வந்துள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் புஜாரா, பந்த், அஸ்வின் உள்ளிட்டவர்களின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண விஷயமில்லை

சாதாரண விஷயமில்லை

ஆஸ்திரேலியா போன்ற வலிமையான பௌலர்களுக்கு எதிராக 3வது பேட்ஸ்மேனாக களமிறங்கி விளையாடுவது சாதாரண விஷயமில்லை என்று புஜாராவிற்கு பாராட்டு தெரிவித்த கங்குலி இதேபோல 400 விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்துவது சாதாரணமில்லை என்று அஸ்வினுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, January 11, 2021, 18:03 [IST]
Other articles published on Jan 11, 2021
English summary
Hope all of us realise the importance of pujara,pant and Ashwin in cricket teams -Ganguly
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X