அந்த 3 விசயம் அப்படியே இருக்கு.. அடுத்த தோனி ஹர்திக் பாண்டியா தான்..காரணத்தை கூறும் இளம் நட்சத்திரம்

மும்பை: இந்தியாவின் அடுத்த தோனி ஹர்திக் பாண்டியா தான் என்று தமிழக வீரர் சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.

25 வயதான சாய் சுதர்சன், தமிழக அணிக்காக சிறப்பாக பந்துவீசியவர். சிஎஸ்கே அணியில் சில சீசன்கள் இருந்தார்.

ஆனால், அவருக்கு சிஎஸ்கே அணியில் கடைசி வரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனையடுத்து மெகா ஏலத்தில் குஜராத் அணியால் சாய் சுதர்சன் வாங்கப்பட்டார்.

டி20 உலககோப்பையில் இடம் வேண்டுமா..? 3 இந்திய வீரர்களுக்கு அக்னி பரிட்சை.. IND vs SA தொடரில் சோதனைடி20 உலககோப்பையில் இடம் வேண்டுமா..? 3 இந்திய வீரர்களுக்கு அக்னி பரிட்சை.. IND vs SA தொடரில் சோதனை

முதல் வாய்ப்பு

முதல் வாய்ப்பு

குஜராத் அணியிலும் முதல் பாதியில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு தரவில்லை. இருப்பினும், பிற்பாதியில் லக்னோ அணிக்கு எதிராக முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய சாய் சுதர்சன், 2 ஓவர்கள் வீசி 7 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன் பிறகு தொடர்ந்து இறுதிப் போட்டி வரை சாய் விளையாடினார்.

ஜுனியர் தோனி

ஜுனியர் தோனி

5 போட்டியில் விளையாடிய சாய் சுதர்சன், 6 விக்கெட்டுகளை கைப்பற்றி ஒரு ஓவருக்கு 7 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார். இந்த நிலையில், குஜராத் அணிக்கு முதல் கோப்பையை வென்று தந்த ஹர்திக் பாண்டியாவை புகழ்ந்து தள்ளினார் சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியாவை ஜுனியர் தோனி என்று அழைக்கலாம்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

காரணம், தோனிக்கும், ஹர்திக்கிற்கும் பல விசயங்களில் ஒற்றுமைகள் உள்ளன. தோனியை போலவே, வீரரிடமிருந்து சிறந்த ஆட்டத்தை ஹர்திக் பாண்டியா வெளி கொண்டு வருகிறார். மேலும் இருவருமே சுயநலமின்றி தங்களுக்கு முன்பு அணியை தான் முதன்மையாக கருதுவார்கள். நடப்பு தொடர் எனக்கு சிறப்பாக அமைந்தது.

தோனியின் அறிவுரை

தோனியின் அறிவுரை

இன்னும் நான் என் விளையாட்டு திறனை வளர்த்து கொள்வேன். சென்னை அணியில் இருக்கும் போது தோனியிடம் எப்போதும் பயிற்றியில் பந்தவீசும் போது ஆலோசனை கேட்பேன். அது எனக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டியை எப்படி அணுகுவத என்ற கலையை நான் தோனியிடமிருந்து தான் கற்று கொண்டேன்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
TN Spinner Sai sudharsan Lauds Hardik Pandya as next Dhoni: இந்தியாவின் அடுத்த தோனி ஹர்திக் பாண்டியா தான் என்று தமிழக வீரர் சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.
Story first published: Friday, June 3, 2022, 12:07 [IST]
Other articles published on Jun 3, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X