For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வின் போட்ட அதிரடி பேட்டிங் திட்டம் புஸ்.. ஆனாலும் திண்டுக்கல் வெற்றி பெற்றது இப்படித் தான்!

Recommended Video

TNPL 2019 : Dindigul vs Chepauk : திண்டுக்கல் வெற்றி பெற்றது இப்படித் தான்!

நத்தம் : அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பேட்டிங் திட்டம் படு சொதப்பலாக முடிந்தது.

2019 டிஎன்பிஎல் தொடரின் முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே சிறப்பாக பேட்டிங் ஆடினார்.

பவர்பிளே திட்டம்

பவர்பிளே திட்டம்

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக ரன் குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த அஸ்வின், துவக்க வீரர் ஹரி நிஷாந்த் 1 ரன்னில் ஆட்டமிழந்த உடன் மூன்றாம் இடத்தில் களமிறங்கினார்.

டாப் ஆர்டரில் அஸ்வின்

டாப் ஆர்டரில் அஸ்வின்

பொதுவாக பின்வரிசையில் களமிறங்கும் அஸ்வின், திடீரென டாப் ஆர்டரில் களமிறங்கியது ஆச்சரியம் அளித்தது. தன் அதிரடி பேட்டிங் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினார் அஸ்வின். அவர் 19 பந்துகளில் 37 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது ஆட்டத்தில் ஐந்து ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்து அசத்தினார்.

திட்டம் சொதப்பல்

திட்டம் சொதப்பல்

எனினும் அடுத்து வந்த வீரர்கள் சொதப்பியதால் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. அஸ்வினுக்கு அடுத்து சதுர்வேத் மட்டுமே ஓரளவு நிலைத்து ஆடி 21 ரன்கள் சேர்த்தார்.

வெற்றி வாய்ப்பு குறைவு

வெற்றி வாய்ப்பு குறைவு

கேப்டன் அஸ்வின் போட்ட பேட்டிங் திட்டம் சொதப்பியதால் மிக மோசமான அளவில் 115 ரன்கள் மட்டுமே எடுத்தது திண்டுக்கல் அணி. வெற்றி பெற குறைந்த வாய்ப்பே உள்ளது என கருதப்பட்டது. எனினும், பந்துவீச்சில் கலக்கியது திண்டுக்கல் டிராகன்ஸ்.

சேப்பாக் படுமோசம்

சேப்பாக் படுமோசம்

சேப்பாக் சூப்பர் கில்லீஸ், அஸ்வின் அணியை விட மிக மோசமாக ஆடினர். முதல் இரண்டு ஓவர்களில் 3 விக்கெட்கள் இழந்து 11 ரன்கள் எடுத்து இருந்தது சேப்பாக். பேட்டிங்கில் விட்டதை பந்துவீச்சில் பிடித்தது திண்டுக்கல் டிராகன்ஸ்.

சிலம்பரசன் தந்த பிரேக்

சிலம்பரசன் தந்த பிரேக்

துவக்கத்தில் விக்கெட்களை இழந்தாலும் சேப்பாக் அணி போராடியது. கடைசி 4 ஓவர்களில் 47 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 6 விக்கெட்கள் இழந்து ஆடி வந்தது. அப்போது 17வது ஓவரில் சிலம்பரசன் 2 விக்கெட்களை வீழ்த்தினார். அத்துடன் சேப்பாக் அணியின் நம்பிக்கை முடிவுக்கு வந்தது. அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

பந்துவீச்சு சூப்பர்

பந்துவீச்சு சூப்பர்

சிலம்பரசன் 4, கௌஷிக் 2, முகமது 2 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினர். பேட்டிங்கில் அசத்திய கேப்டன் அஸ்வின் பந்துவீச்சில் சொதப்பினார். 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து இருந்தார். ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.

Story first published: Friday, July 19, 2019, 22:57 [IST]
Other articles published on Jul 19, 2019
English summary
TNPL 2019 DD vs CSG : Ashwin batting plan failed but bowling worked out well
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X