For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டிஎன்பிஎல் டி20 தொடர் தள்ளிவைப்பு.. கொரோனா வைரஸ்.. ஐபிஎல்.. இந்த ஆண்டு கடினம்!

சென்னை : தமிழக அளவில் நடைபெறும் டிஎன்பிஎல் டி20 தொடர் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜூன் 10 முதல் ஜூலை 12 வரை நடைபெறும் வகையில் டிஎன்பிஎல் டி20 தொடர் அட்டவணை முன்பு தயார் ஆகி இருந்தது.

TNPL 2020 postponed again due to coronavirus

அதன்பின் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து லாக்டவுன் உள்ளிட்ட காரணங்களால் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கினர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ஜூலை மாதம் தான் மீண்டும் துவங்கியது.

இந்திய அணி இதுவரை எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை., செப்டம்பர், அக்டோபர், நவம்பரில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.

இதனிடையே டிஎன்பிஎல் தொடரை நடத்த போதிய தேதிகள் இல்லை என்பதோடு தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், அந்த தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அந்த தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒருமுறை தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. ஜூலை இறுதி முதல் செப்டம்பர் வரையிலான இடைவெளியில் டிஎன்பிஎல் தொடரை நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பு முயற்சி செய்தது.

சச்சின், கோலி தவிர வேறு எந்த இந்திய வீரரும் செய்யாத ஐபிஎல் சாதனை.. ஏபிடியின் தொட முடியாத ரெக்கார்டு!சச்சின், கோலி தவிர வேறு எந்த இந்திய வீரரும் செய்யாத ஐபிஎல் சாதனை.. ஏபிடியின் தொட முடியாத ரெக்கார்டு!

அதற்கு வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டது. தற்போது ஐபிஎல் தொடர் செப்டம்பர் முதல் நவம்பர் முதல் வாரம் வரை நடைபெற இருப்பதால் அந்த காலகட்டத்திலும் டிஎன்பிஎல் தொடரை நடத்த வாய்ப்பு இல்லை.

நவம்பர் இறுதி அல்லது மார்ச் 2021இல் டிஎன்பிஎல் தொடரை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பு கூறி உள்ளது. தமிழ்நாட்டில் 2.4 லட்சம் பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, August 1, 2020, 19:52 [IST]
Other articles published on Aug 1, 2020
English summary
TNPL 2020 postponed due to coronavirus and IPL 2020. TNCA is looking for a window between November end and March 2021.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X