உத்வேகம் எடுக்கும் TNPL தொடர்.. இன்று இரு முக்கிய அணிகள் மோதல்.. வானிலை நிலவரம் என்ன - முழு விவரம்!

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 3வது லீக் போட்டி இன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

கொரோனா காரணமாக கடந்தாண்டு தள்ளிவைக்கப்பட்ட டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி கடந்த 19ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தொடர் முதல் 3 லீக் போட்டிகளிலேயே ரசிகர்களுக்கு சலிப்பை கொடுத்துள்ளது. இந்நிலையில் இன்று 4வது லீக் போட்டி தொடங்குகிறது.

இன்று நடைபெறும் 4வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் ( Dindigul Dragons), மதுரை பேந்தர்ஸ் ( Madurai Panthers) அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் போட்டி தொடங்குகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் அதிகம் இருப்பதால் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தொடர் தொடக்கத்திலேயே சலிப்பை கொடுத்துள்ளது. முதல் 2 லீக் ஆட்டங்கள் விறுவிறுப்பாக சென்ற நிலையில் மழைக் குறுக்கிட்டு ஆட்டம் ரத்து கைவிடப்பட்டது. நேற்று நடைபெற்ற 3வது லீக் போட்டியில் நெல்லை அணி மிகவும் மோசமாக பேட்டிங் செய்ததால் போட்டி எந்தவித சுவாரஸ்யமும் இன்றி முடிந்தது. எனவே இன்றைய போட்டியாவது மழையின் பாதிப்பு இன்றி விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஒலிம்பிக் தொடக்க விழா.. பல இந்திய வீரர், வீராங்கனைகள் இல்லை.. திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்! ஒலிம்பிக் தொடக்க விழா.. பல இந்திய வீரர், வீராங்கனைகள் இல்லை.. திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!

சென்னையில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இன்றைய வானிலை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், இரவு நேரத்தில் 70% சதவீத அளவிற்கு இடி இருக்கும் என்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Dindigul Dragons Clash with Madurai Panthers today in TNPL League 4 match
Story first published: Thursday, July 22, 2021, 16:52 [IST]
Other articles published on Jul 22, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X