For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடி தூள்..!! டிஎன்பிஎல் முதல் போட்டியே சூப்பர் ஓவர்.. நெல்லையிடம் போராடி சரணடைந்த சேப்பாக்

திருநெல்வேலி: தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 6வது சீஸன் பிரம்மாண்டமாக திருநெல்வேலியில் நேற்று தொடங்கியது.

முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் இடையே நடந்த மோதலில் சூப்பர் ஓவரின் முடிவில் பரபரப்பான வெற்றியை நெல்லை ராயல் கிங்ஸ் அணி பெற்றது

முன்னதாக, நெல்லை ராயல் கிங்ஸின் முதல் இன்னிங்ஸில் தொடக்கத்திலேயே தடுமாறி பவர்ப்ளேவிற்குள் ப்ரதோஷ் ரஞ்சன் பால் (7) பாபா அபராஜித்(2) மற்றும் கேப்டன் இந்திரஜித் (3) விக்கெட்களை இழந்து பரிதாபமான நிலையை சந்தித்தது.

பேட்டிங்கில் பொளந்து கட்டிய மும்பை இந்தியன்ஸ் வீரர்.. டிஎன்பிஎல் முதல் ஆட்டத்தில் சரவெடி..வேற லெவல்!பேட்டிங்கில் பொளந்து கட்டிய மும்பை இந்தியன்ஸ் வீரர்.. டிஎன்பிஎல் முதல் ஆட்டத்தில் சரவெடி..வேற லெவல்!

சஞ்சய் அதிரடி

சஞ்சய் அதிரடி

அதன்பின் களமிறங்கிய சூர்யபிரகாஷுடன் இணைந்து ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்க்காக விளையாடிய சஞ்சய் யாதவ் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஒரு புறம் சூர்யபிரகாஷ் டி.என்.பி.எல் தொடரில் தனது 3வது அரைசதத்தை விளாச மறுபுறம் அபாரமாக விளையாடி சஞ்சய் யாதவ் தனது 5வது அரைசதத்தை டி.என்.பி.எல் தொடரில் 30 பந்துகளில் விளாசினார்.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

இவ்விருவரும் இணைந்து தமிழ்நாடு பிரீமியர் லீக் வரலாற்றில் 4வது விக்கெட்டிற்கு அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பை 133 ரன்கள் அமைத்தனர். நெல்லை ராயல் கிங்ஸ் சார்பில் அதிகபட்சமாக சஞ்சய் யாதவ் 47 பந்துகளில் 87 ரன்கள் குவிக்க அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்ததுசேப்பாக் சூப்பர் கில்லீஸ் சார்பில் பெளலிங்கில் சித்தார்த் மற்றும் ஹரீஷ் குமார் மட்டுமே ஆறுதல் அளிக்கும் வகையில் செயல்பட்டனர்.

முதலில் தடுமாற்றம்

முதலில் தடுமாற்றம்

இரண்டாவது இன்னிங்ஸில் கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சிறப்பாக ஆட்டத்தை தொடங்கினாலும் டி.என்.பி.எல் வரலாற்றில் முதன்முறையாக பாபா அபராஜித்தின் மூலம் மன்கட் முறையில் நட்சத்திர வீரர் ஜெகதீசன் (15 பந்துகளில் 25 ரன்கள்) ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ராதாகிருஷ்ணன்(1), சசிதேவ்(15) பெரிதளவில் பங்களிக்க தவறினர்.

சமனான போட்டி

சமனான போட்டி

அதன்பின் 4வது விக்கெட்டிற்கு சோனு யாதவ் மற்றும் கேப்டன் கெளஷிக் காந்தி இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். சோனு யாதவ் தன் பங்கிற்கு 23 பந்துகளில் 34 ரன்கள் குவித்து கை கொடுக்க, கேப்டன் கெளஷிக் காந்தி டி.என்.பி.எல்லில் தனது 9வது அரைசதத்தை நிறைவு செய்தார். சேப்பாக் கேப்டன் கெளஷிக் காந்தி அதிகபட்சமாக 43 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து முக்கிய தருணத்தில் அதிசயராஜ் டேவிட்சனிடம் தனது விக்கெட்டை இழந்தார்.

சூப்பர் ஓவர்

சூப்பர் ஓவர்

வெற்றிக்கான இறுதி ஓவரில் அதிசயராஜ் பந்துவீச்சை எதிர்கொண்ட ஹரிஷ் குமார் 12 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 26* ரன்கள் விளாசி ஸ்கோர் சமமானதால் சூப்பர் ஓவர் முறை கொண்டு வரப்பட்டது. சூப்பர் ஓவரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் மட்டுமே எடுக்க நெல்லை ராயல் கிங்ஸின் பேட்டர்கள் அந்த இலக்கை வெற்றிகரமாக அடைந்து இந்த சீஸனில் தங்களின் முதல் வெற்றியைப் பதிவு செய்தனர்

Story first published: Friday, June 24, 2022, 10:26 [IST]
Other articles published on Jun 24, 2022
English summary
TNPL season 6 – super over decides the winner of first league match அடி தூள்..!! டிஎன்பிஎல் முதல் போட்டியே சூப்பர் ஓவர்.. நெல்லையிடம் போராடி சரணடைந்த சேப்பாக்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X