For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரிக்கெட்டை உலகமயமாக்கும் முயற்சியில் சச்சின்... அமெரிக்க பயணம் கை கொடுக்குமா?

நியூயார்க்: கிரிக்கெட்டை உலக அளவில் மிகப் பெரிய அளவுக்குப் பிரபலமாக்கும் முயற்சியில் சச்சின் டெண்டுல்கர் இறங்கியுள்ளார். இதற்காகவே அமெரிக்காவில் முன்னாள் வீரர்களைக் கொண்ட டுவென்டி 20 கிரிக்கெட் தொடரை ஏற்பாடு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கிரிக்கெட் மிகப் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து உலக அளவிலான விளையாட்டாக மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதற்கு இந்த அமெரிக்க தொடர் பெரும் உதவியாக இருக்கும் என்பது சச்சினின் நம்பிக்கையாகும்.

இதுகுறித்து நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் சச்சின் பேசியதாவது:

உலகமயமாக்கல்

உலகமயமாக்கல்

கிரிக்கெட்டை உலக அளவில் மேலும் பல நாடுகளுக்குக் கொண்டு செல்லும் முயற்சிதான் இந்த அமெரிக்க கிரிக்கெட் தொடர். இங்குள்ள இளைஞர்கள், இளம் பெண்களிடையே கிரிக்கெட்டை பிரபலமாக்க முயல்கிறோம்.

இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

அமெரிக்காவில் நடைபெறும் 3 போட்டிகளையும் நேரில் காண 1000 இளண் வீரர் வீராங்கனைகள் வரவுள்ளனர். அவர்களும் போட்டிகளைப் பார்த்து உற்சாகமடையவுள்ள்ளனர். தாங்கள் நேசித்த வீரர்களின் ஆட்டத்தை நேரில் கண்டுகளிக்கவுள்ளனர்.

கிரிக்கெட்டை கற்றுத் தருவோம்

கிரிக்கெட்டை கற்றுத் தருவோம்

போட்டியைக் காண வரும் இளைஞர்களிடம் நாங்களும் உரையாடவும் உள்ளோம். கிரிக்கெட் குறித்தும் பேசவுள்ளோம். அவர்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவுள்ளோம்.

கை தட்டி பாராட்டுங்கள்

கை தட்டி பாராட்டுங்கள்

இங்கு நாங்கள் வந்துள்ளதற்கு முக்கியக் காரணம் உங்களை ஊக்குவிக்கவே. நீங்கள் அதை இரு கரம் தட்டி வரவேற்று கற்றுக் கொள்ளுங்கள். நாங்கள் உங்களுக்கு உதவக் காத்திருக்கிறோம்.

அமெரிக்கர்கள் வரவேற்பார்கள்

அமெரிக்கர்கள் வரவேற்பார்கள்

அமெரிக்கர்கள் விளையாட்டை நேசிப்பவர்கள், அதை சுவாசிப்பவர்கள். எனவே கிரிக்கெட்டையும் அவர்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள் என நம்புகிறேன் என்றார் சச்சின்.

To make cricket global, Tendulkar set to woo USA
Story first published: Friday, November 6, 2015, 15:34 [IST]
Other articles published on Nov 6, 2015
English summary
Indian cricket legend Sachin Tendulkar hopes to see cricket become a global sport by making an impact on the youngsters and women in America through the inaugural three-match All Stars series starting here
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X