For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலியை விடுங்க.. இன்னும் 5 வருஷத்துல இவர் தான் டாப்பு.. யாரும் கேள்வியே கேட்க முடியாது! - டாம் மூடி

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசாம் முதல் ஐந்து வீரர்களில் ஒருவராக மாறி விடுவார் என கூறி உள்ளார்.

Recommended Video

Tom moody has his opinion on Kohli vs Babar Azam issue

மேலும், விராட் கோலி பேட்டிங் செய்வதை பார்க்க நன்றாக இருக்கிறது என கூறுபவர்கள், பாபர் ஆசாம் பேட்டிங் செய்வதை பார்க்க வேண்டும் எனவும் கூறி உள்ளார்.

அதே போல, டெஸ்ட் போட்டிகளில் பாபர் ஆசாம் பேட்டிங்கை ஆதரித்தும் பேசி உள்ளார் டாம் மூடி.

தலைசிறந்த பேட்ஸ்மேன்

தலைசிறந்த பேட்ஸ்மேன்

பாகிஸ்தான் நாட்டின் எந்த காலத்திலும் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலை எடுத்தால் அதில் நிச்சயம் தற்போது ஆடி வரும் பாபர் ஆசாமை சேர்த்து விடலாம். அந்த அளவுக்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார்.

நல்ல சராசரி

நல்ல சராசரி

டெஸ்ட் போட்டிகளிலும் நல்ல சராசரி வைத்துள்ளார். அதிலும் விரைவில் முன்னேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலியுடன் - பாபர் ஆசாமை ஒப்பிட்டு வருவதும் கடந்த ஓராண்டாக தவிர்க்க முடியாத விஷயமாக உள்ளது.

பாபர் - கோலி ஒப்பீடு

பாபர் - கோலி ஒப்பீடு

இந்த நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் டாம் மூடி, விராட் கோலி - பாபர் ஆசாம் ஒப்பீட்டை முன் வைத்துள்ளார். அதன் மூலம், பாபர் ஆசாம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் முதல் ஐந்து பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருப்பார் என கூறி உள்ளார்.

பாபர் சிறப்பு வாய்ந்தவர்

பாபர் சிறப்பு வாய்ந்தவர்

"பாபர் கடந்த ஆண்டில் மிகவும் சிறப்பு வாய்ந்த வீரராக உருவெடுத்துள்ளார். விராட் கோலி ஒரு பேட்ஸ்மேனாக பார்க்க நன்றாக இருக்கிறார் என நாம் பேசுகிறோம். கோலியை பார்ப்பது பற்றி அப்படி நீங்கள் நினைத்தால், பாபர் ஆசாம் பேட்டிங்கைப் பாருங்கள். அவர் ஏதோ ஒரு வகையில் சிறப்பு வாய்ந்தவர்" என்று டாம் மூடி கூறினார்.

ஐந்து பேட்ஸ்மேன்களில் ஒருவர்

ஐந்து பேட்ஸ்மேன்களில் ஒருவர்

மேலும், "அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில், அவர் நிச்சயமாக அடுத்த பத்தாண்டுகளில் யாரும் கேள்வி கேட்க முடியாத படி முதல் ஐந்து பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருப்பார் என்று நான் நினைக்கிறேன்" எனவும் பாபர் ஆசாமின் எதிர்காலம் பற்றி கூறினார் டாம் மூடி.

டெஸ்ட் போட்டி செயல்பாடு

டெஸ்ட் போட்டி செயல்பாடு

பாபர் ஆசாம் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் சுமாராக ஆடுவதாக ஒரு குறை உள்ளது. அதை ஆதரித்து பேசினார் டாம் ​​மூடி. பாபர் ஆசாம் 26 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளதாக குறிப்பிட்டார். அந்த போட்டிகளில் பெரும்பாலானவற்றில், அவர் 6 அல்லது 7ஆம் வரிசையில் பேட்டிங் செய்வதை சுட்டிக் காட்டினார்.

பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசை

"பாபர் ஆசாம் 26 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தாலும், அந்த போட்டிகளில் பாதியில், அவர் முக்கிய பேட்டிங் வரிசையில் இடம் பெறவில்லை. அவர் பேட்டிங் வரிசையில் கீழே ஆடினார்" என்று டாம் மூடி கூறினார்.

வெளிநாட்டு டெஸ்ட் நிலை

வெளிநாட்டு டெஸ்ட் நிலை

"அந்த கீழ் வரிசையில் அவர் பேட்டிங் செய்யும் நிலையில், அவரது பேட்டிங் பற்றி பேசுவது மிகவும் கடினம். வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் பேட்டிங் சராசரியாக 37 வைத்துள்ளார். பாகிஸ்தான் மண்ணில் ஆடும் டெஸ்ட் போட்டிகளில் சராசரியாக 67 வைத்துள்ளார்."

ஆதரவு கருத்து

ஆதரவு கருத்து

"ஆனால் அவர் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடிய போது தன் கிரிக்கெட் வாழ்வின் துவக்கத்தில் இருந்தார் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்" என்று பாபர் ஆசாமின் டெஸ்ட் பேட்டிங்கிற்கு ஆதரவாக பேசினார் டாம் மூடி.

Story first published: Thursday, May 7, 2020, 10:43 [IST]
Other articles published on May 7, 2020
English summary
Tom Moody says Babar Azam will be among top 5 batsman in this decade in 5 years. He also compares him with Virat Kohli.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X