For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ICC World Cup Flashback: 36 ஆண்டுகள் ஆகியும் முறியடிக்கப்படாத சாதனை..!! சில ஆச்சர்ய தகவல்கள்..!!

லண்டன்:உலக கோப்பை தொடங்க இருக்கிறது. சாதனைகளுக்கு பஞ்சம் இருக்காது. கடந்த கால உலக கோப்பை தொடரில் மறக்க முடியாத, யாரும் எட்ட முடியாத சாதனைகளும் உண்டு. அவற்றை பற்றிய தொகுப்பு தான் இது.

கிரிக்கெட்டில் சில சாதனைகள் அதிசயிக்க வைக்கும். சில சாதனைகள் ஆச்சரியப்பட வைக்கும். உதாரணத்துக்கு ஒன்றை சொல்லாலாம். நியூசி லாந்தின் தொடக்க வீரர் நாதன் ஆஸ்லே ஒரு வித்தியாசமான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். அதிவேக இரட்டைச் சதத்திற்கான டெஸ்ட் உலக சாதனையை இன்னமும் கையில் வைத்திருக்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிராக 152 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து சாதனை புரிந்தார். ஆனால் 90ம் ஆண்டுகளில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர் அவர். ஆக, எதிர்மறைச் சாதனைக்கும் உரியவராக மாறி போனார் நாதன் ஆஸ்லே. பொதுவாக எண் ராசி என்பது எல்லா இடத்திலும் உண்டு. அதிலும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் அதற்கு ஏக மவுசு உண்டு.

அதிசயம் நிகழுமா?.. யாரும் செய்யாத அந்த சாதனை.. இந்த உலகக் கோப்பையில் நடக்கும்.. பரபர கணிப்பு! அதிசயம் நிகழுமா?.. யாரும் செய்யாத அந்த சாதனை.. இந்த உலகக் கோப்பையில் நடக்கும்.. பரபர கணிப்பு!

எண்களின் தொடர்பு

எண்களின் தொடர்பு

இன்னும் சொல்லப் போனால், மிக பெரிய வீரர்கள், அதிகம் பேசப்படாத வீரர்கள், அணிகள் செய்துள்ள சில அதிசயங்கள் எப்போதும் மறக்க முடியாதவை. அது போல் உலக கோப்பையில் சில எண்கள் அதிசயிக்க வைக்கும். அந்த எண்களை தற்போது பார்க்கலாம்:

36 ஆண்டுகால சாதனை

36 ஆண்டுகால சாதனை

3.24: இந்த பவுலிங் சராசரி 36 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருக்கிறது. அதி சிக்கனமான, உலக கோப்பை பவுலிங் அட்டவணையில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. 1975, 1979, 1983 உலக கோப்பைகளில் ஆடிய மேற்கிந்திய தீவுகளின் உலகின் தலைசிறந்த வேகப் பந்து வீச்சாளர் ஆண்டி ராபர்ட்ஸ்தான் இந்த சாதனைக்கு இன்னமும் சொந்தக்காரர். மொத்தம் 16 போட்டிகளில் 26 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.

ஒரே தொடரில் 21 கேட்ச்

ஒரே தொடரில் 21 கேட்ச்

21: ஆடம் கில்கிறிஸ்ட் 2003 உலக கோப்பை தொடரில் விக்கெட் கீப்பராக வீரர்களை ஆட்டமிழக்க செய்த எண்ணிக்கை. ஒரே தொடரில் 21 கேட்ச்கள் எடுத்து சாதனையை தன் வசம் வைத்திருக்கிறார். தற்போது அவர் ஓய்வு பெற்று விட்டார்.

மலைக்க வைக்கும் ரேட்

மலைக்க வைக்கும் ரேட்

23.8 :பந்துவீச்சில் சிறந்த பவுலிங் ஸ்ட்ரைக் ரேட் என்று இருக்கிறது. அந்த சாதனை வீரர் லசித் மலிங்கா. 23.8 என்ற ஸ்டிரைக் ரேட் முறியடிக்கப்பட வில்லை.

தோனி 32

தோனி 32

32: உலக கோப்பையில் தோனி அவுட் ஆக்கிய விக்கெட்டுகள் எண்ணிக்கை யாகும் இது. இந்த உலக கோப்பையிலும், அதிக விக்கெட்டுகளை அவர் அவுட்டாக்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.

நடுவர்கள் சாதனை

நடுவர்கள் சாதனை

46: இங்கிலாந்து நடுவர் டேவிட் ஷெப்பர்ட் பணியாற்றிய உலக கோப்பை போட்டிகளின் எண்ணிக்கை, அடுத்த இடத்தில் மே.இ.தீவுகளின் ஸ்டீவ் பக்னர் இவர் 45 போட்டிகளில் களநடுவராகப் பணியாற்றியுள்ளார்.

59 எக்ஸ்டிராஸ்

59 எக்ஸ்டிராஸ்

59: 1999 உலக கோப்பையில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி விட்டுக் கொடுத்த எக்ஸ்ட்ராஸ் ரன்கள் 59 (கிட்டத்தட்ட 10 ஓவர்கள் என்று வைத்துக் கொள்ளலாம்). அந்த போட்டியில் வாசிம் அக்ரம், சோயப் அக்தர் இருந்தும் 33 வைடுகள் 15 நோபால்கள்.

அதிகபட்ச சராசரி

அதிகபட்ச சராசரி

61.42: இந்தியாவின் பெருஞ்சுவர், பாதுகாப்பு அரண் என்று வர்ணிக்கப்பட்ட வீரர் ராகுல் டிராவிட். 1999ம் ஆண்டு உலக கோப்பையில் வைத்திருந்த இது அவரின் அதிக பட்ச சராசரி சாதனையாகும்.

105 ரன்கள் விட்டுக்கொடுப்பு

105 ரன்கள் விட்டுக்கொடுப்பு

105: நியூசிலாந்தின் மார்டின் ஸ்னெடன் 12 ஒவர்களில் 105 ரன்களை விட்டுக் கொடுத்தார், இதே மார்டின் ஸ்னெடன் 1987 உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக 10 ஓவர்களில் 102 ரன்களை அள்ளிக் கொடுத்த வள்ளல் என்பது பலருக்கு தெரியாது.

குளுஸ்னர் ரெக்கார்டு

குளுஸ்னர் ரெக்கார்டு

124: உலக கோப்பையில் 124 ரன்கள் சராசரி வைத்திருந்த ஒரே வீரர் தென் ஆப்ரிக்காவின் ஆல் ரவுண்டர் லான்ஸ் குளூஸ்னர். 1999 மற்றும் 2003 உலக கோப்பை தொடர்களில் குளூஸ்னர் முத்திரை பதித்தார். ஜூலு என்று செல்ல பெயரால் சக வீரர்களால் அழைக்கப்படுவர். 1999ல் அற்புதமாக ஆடி அனைவரும் பிரமிக்க வைத்தார். அந்த உலககோப்பையில் 281 ரன்களை 140.80 என்ற சராசரியில் எடுத்திருந்தார், பந்து வீச்சில் 17 விக்கெட்டுகளுடன் 4வதாக திகழ்ந்தார். மொத்தமாக இவரது உ.கோப்பை பேட்டிங் சராசரி 124.

அதிகபட்ச ஸ்டிரைக்

அதிகபட்ச ஸ்டிரைக்

387.50: ஒரு இன்னிங்சின் அதிகபட்ச ஸ்டிரைக் ரேட்டை வைத்திருப்பவர் நியூசிலாந்தின் ஜெம்ஸ் பிராங்க்ளின், 2011ம் ஆண்டு உலக கோப்பையில், கனடா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 பந்துகளில் 31 ரன்களை எடுத்தார். 2 பவுண்டரிகள் 3 சிக்சர்கள். 5 பந்துகளில் 26 ரன்கள் அடித்தவர் அடுத்த 5 ரன்களை 3 பந்துகளில் எடுத்தார்.

Story first published: Wednesday, May 29, 2019, 16:01 [IST]
Other articles published on May 29, 2019
English summary
Top 10 famous and remarkable records in previous world cup series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X