For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ICC World Cup 2019:இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு யாருக்கு...? கோலிக்கு கிடைக்குமா? ஓர் அலசல்..!!

லண்டன்:உலக கோப்பை கிரிக்கெட்டில் சதம் அடிக்கும் வாய்ப்பை விட, இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்புகளை சில வீரர்கள் பெற்றுள்ளனர். அவர்கள் யார் என்று இதில் பார்ப்போம்.

கிரிக்கெட்டில் சதம் விளாசினால் சாதனை. அதிலும் இரட்டை சதம் என்றால் சொல்லவே வேண்டாம். கிரிக்கெட் உலகில் இன்றைய தலைமுறையினர் இரட்டை சதத்தை காணும் வாய்ப்பு கிட்டத்தட்ட 39 ஆண்டுகள் கழித்து கிடைத்தது.

2010ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் கிரிக்கெட் வரலாற்றில் கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் முதன்முதலாக இரட்டை சதம் விளாசினார். அதன் பின் 5க்கும் மேற்பட்ட வீரர்கள் இரட்டை சதத்தினை விளாசியுள்ளார். இதில் ரோகித் சர்மா மட்டும் 3 இரட்டை சதத்தினை விளாசி இருக்கிறார்.

9.5வது ஓவரில் நிகழ்ந்த மாயம்.. இப்படி ஒரு யார்க்கரா.. ஆச்சர்யப்பட வைத்த பும்ரா பவுலிங்.. வீடியோ! 9.5வது ஓவரில் நிகழ்ந்த மாயம்.. இப்படி ஒரு யார்க்கரா.. ஆச்சர்யப்பட வைத்த பும்ரா பவுலிங்.. வீடியோ!

 4 வீரர்கள் யார்?

4 வீரர்கள் யார்?

தற்போது வரை ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசுவது என்பது ஒரு மிக பெரிய சாதனையாகவே உள்ளது. உலக கோப்பை திருவிழாவில் முதல் இரட்டை சதத்தினை விளாச வாய்ப்புள்ள 4 வீரர்கள் யார் என்று பார்ப்போம்.

அதிரடி வார்னர்

அதிரடி வார்னர்

உலகின் மிகவும் அதிரடியான வீரர் என்ற வரிசையில் இருப்பவர் டேவிட் வார்னர். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை அவருக்கு இருக்கிறது. தொடக்கத்திலிருந்து இறுதி வரை நின்று விளையாடினால் கண்டிப்பாக இரட்டை சதம் அவருக்கு நிச்சயம்.

14 சதங்கள், சூப்பர் பார்ம்

14 சதங்கள், சூப்பர் பார்ம்

ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 14 சதங்களை விளாசியுள்ளார். ஒரு போட்டியில் அதிக பட்சமாக 179 ரன்களை குவித்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் இவரது பேயாட்டத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ஓராண்டு தடைக்கு பின்னர், பார்முக்கு திரும்புவது என்பது அவ்வளவு எளிதல்ல. எனவே, அவர் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

ஜானி பேர்ஸ்டோவ்

ஜானி பேர்ஸ்டோவ்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி சில ஆண்டுகளாக யாரும் நினைத்து பார்க்க முடியாத பார்மில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணியின் வலிமையான பேட்டிங்குக்கு ஜானி பேர்ஸ்டோவ் என்ற வீரரும் முக்கிய காரணம். இங்கிலாந்து அணிக்கு ஒரு தடுப்பு சுவராக களத்தில் நின்று தனது அதிரடியாக ஆடி வருகிறார்.

சீரான ஆட்டமே பிளஸ்

சீரான ஆட்டமே பிளஸ்

வலதுகை பேட்ஸ்மேனான அவரின் ஸ்டிரைக் ரேட் 107. சில ஆண்டுகளாக கிரிக்கெட்டில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி, பெரிய இன்னிங்ஸை விளையாடும் திறமை ஜானி பேர்ஸ்டோவிற்கு உண்டு. ஷாட் தேர்வை சரியாக தேர்ந்தெடுத்து அவர் ஆடினால், கண்டிப்பாக உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இரட்டை சதம் சதம் விளாசுவார்.

சிறந்த பேட்ஸ்மென்

சிறந்த பேட்ஸ்மென்

உலக கிரிக்கெட்டில் சிறந்த, தனித்துவமான பேட்ஸ்மேனாக கருதப்படுபவர் விராட் கோலி. ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மெனான அவர், இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 41 சதங்களை விளாசி தள்ளி இருக்கிறார். சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிய இன்னிங்ஸை விளையாடும் திறமை அவரிடம் உண்டு.

இதுவரை இல்லை

இதுவரை இல்லை

சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்தும், முறியடித்தும் உள்ளார். ஆனால் இது வரை ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதத்தினை மட்டும் விளாசியது இல்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் கோலியின் அதிகபட்ச ரன்கள் 183. இரட்டை சதம் என்ற சாதனை தற்போது அவருக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்லலாம்.

3 சதம் விளாசியவர்

3 சதம் விளாசியவர்

உலகின் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் வரிசையில் இருப்பவர் காலின் முன்ரோ. ஆச்சரியமான விஷயம்... சர்வதேச டி 20 தொடரில் காலின் முன்ரோ 3 சதங்களை விளாசியுள்ளார். ஆனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சதம் கூட கிடையாது. ஷாட்களை சரியாக தேர்ந்தெடுத்து அதிரடியாக விளையாடும் ஆற்றல் பெற்றவர்.

அதிரடி வீரர்

அதிரடி வீரர்

நியூசிலாந்தின் பவர் ஹிட்டர் காலின் முன்ரோ பெரிய சிக்சர்களை விளாசுவார்.. இடதுகை பேட்ஸ்மேன், 107 ஸ்ட்ரைக் ரேட்டை ஒருநாள் கிரிக்கெட்டில் வைத்துள்ளார். உலக கோப்பை கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேனாக நிருபித்து இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர் பார்க்கலாம்.

Story first published: Wednesday, May 29, 2019, 14:52 [IST]
Other articles published on May 29, 2019
English summary
Top 3 batsmen’s who may hit double century’s in world cup 2019.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X