For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே ஒரு இந்தியர் மட்டுமே.. அதிக ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்த டாப் 5 வீரர்கள் லிஸ்ட்!

மும்பை : அதிக போட்டிகளில் கேப்டனாக இருப்பது சாதாரண காரியம் அல்ல. போட்டிக்கான திட்டமிடல், விமர்சனத்தை சமாளிப்பது, வீரர்களை ஊக்குவிப்பது என கடினமான காரியம்.

Recommended Video

Top 5 ODI captains with most matches

ஆனால், இதை எல்லாம் சமாளித்து சிறப்பான கேப்டனாக இருந்த பலரை நமக்கு தெரியும்.

அனாலும், அவர்கள் அனைவர்க்கும் அதிக போட்டிகளில் கேப்டனாக இருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

சிக்ஸ் அடிக்கவே சொல்லிக் கொடுக்காத காலத்தில் அஸ்வினை மிரள வைத்த தோனி.. சிஎஸ்கேவில் நடந்த சம்பவம்!சிக்ஸ் அடிக்கவே சொல்லிக் கொடுக்காத காலத்தில் அஸ்வினை மிரள வைத்த தோனி.. சிஎஸ்கேவில் நடந்த சம்பவம்!

ஒரே ஒரு இந்தியர்

ஒரே ஒரு இந்தியர்

அதிக ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்த முதல் ஐந்து வீரர்களின் பட்டியலில் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டுமே இடம் பெற்றுள்ளார். அதே ஐந்து இடங்களில் இரண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஒரு நியூசிலாந்து மற்றும் இலங்கை வீரரும் இடம் பெற்றுள்ளனர்.

ரிக்கி பாண்டிங்

ரிக்கி பாண்டிங்

முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் சிறந்த கேப்டனான ரிக்கி பாண்டிங் இடம் பெற்றுள்ளார். இவர் 230 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தி உள்ளார். அதில் 165 வெற்றிகளை குவித்துள்ளார். வெற்றி சதவீதம் - 76.14.

ஸ்டீபன் பிளெம்மிங்

ஸ்டீபன் பிளெம்மிங்

அடுத்த இடத்தில் நியூசிலாந்து அணியின் நீண்ட நாள் கேப்டன் ஸ்டீபன் பிளெம்மிங் இடம் பெற்றுள்ளார். அவர் தான் ஆடிய 280 ஒருநாள் போட்டிகளில் 218 போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதில் 98 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். வெற்றி சதவீதம் - 48.04.

தோனி

தோனி

இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய வீரர் தோனி தான். சரியாக 200 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி உள்ளார் தோனி. 2016இல் கேப்டன் பதவியை கோலியிடம் அளித்த அவர், கேப்டனாக தன் 200வது போட்டியை 2018 ஆசிய கோப்பை தொடரில் ஆடினார்.

மூன்று முக்கிய கோப்பைகள்

மூன்று முக்கிய கோப்பைகள்

தோனி மட்டுமே இந்திய அணிக்கு டி20 உலகக்கோப்பை (2007), ஒருநாள் போட்டி உலகக்கோப்பை (2011), சாம்பியன்ஸ் ட்ராபி (2013) வென்று கொடுத்த கேப்டன் ஆவார். அவர் 200 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்து 110 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். வெற்றி சதவீதம் - 59.52.

அர்ஜுனா ரணதுங்கா

அர்ஜுனா ரணதுங்கா

இலங்கை அணிக்கு உலகக்கோப்பை வென்று கொடுத்த கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா. அவர் தான் ஆடிய 269 ஒருநாள் போட்டிகளில், இலங்கை அணியை 193 போட்டிகளில் வழிநடத்தி உள்ளார். 89 வெற்றிகள் பெற்றுக் கொடுத்து உள்ளார். வெற்றி சதவீதம் - 48.37.

ஆலன் பார்டர்

ஆலன் பார்டர்

ஆஸ்திரேலியாவின் மற்றொரு சிறந்த கேப்டன் ஆலன் பார்டர். அவர் 178 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தி உள்ளார். 9 ஆண்டுகள் அணியை வழிநடத்திய அவர் 107 வெற்றிகள் பெற்றுக் கொடுத்துள்ளார். வெற்றி சதவீதம் - 61.42.

Story first published: Wednesday, June 17, 2020, 23:51 [IST]
Other articles published on Jun 17, 2020
English summary
Here is the top 5 ODI captains with most matches list. Only one Indian player finds place in the top 5.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X