For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐ.பி.எல். 2022 ஏலத்தில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு அனுமதி?

ஐ.பி.எல். 2022ஆம் ஆண்டு புதிய 2 அணிகளை சேர்த்து 10 அணிகள் விளையாட உள்ளன. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி வீரர்களையும் சேர்த்து கொள்ள வேண்டும் என்று விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாகிஸ்தானுடன் இந்தியா இருத்தரப்பு தொடர்களில் விளையாடவில்லை. இதனால் ஐ.சி.சி. தொடரில் மோதும் போது பாகிஸ்தானை எதிர்கொள்ள இந்திய வீரர்கள் திணறுகின்றனர்.

மேலும் பாகிஸ்தான் வீரர்கள் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதால், அவர்களை ஐ.பி.எல். தொடரில் அனுமதித்தால், ஐ.பி.எல். தொடர் வேற வெலலில் இருக்கும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அப்படி அனுமதி அளிக்கப்பட்டால் எந்த வீரர்களுக்கு லக் அடிக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்..

பாபர் அசாம்

பாபர் அசாம்

டி20 போட்டிகளின் பிராட்மேன் என்று பெயர் எடுத்துள்ள பாபர் அசாமை ஏலத்தில் எடுக்க, 10 அணிகளும் கடுமையாக போட்டி போடும். தொடக்க வீரராக இறங்கி ரன் சேர்ப்பதோடு மட்டுமல்லாமல் கேப்டனாகவும் செயல்படுவதில் வல்லவர். இதனால் இவருக்கு மவுசு அதிகமாக இருக்கும்

முகமது ரிஸ்வான்

முகமது ரிஸ்வான்

டி20 போட்டிகளில் நடப்பாண்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள ரிஸ்வான், அதிக விலைக்கு போகும் வீரராக திகழ்வார். பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் என அணியின் தூணாக விளங்க கூடியவர் . இதனால் அனைத்து அணிகளும் இதுபோன்ற வீரர் தேவை என்று நினைக்கும்.

ஷாகின் ஷா அஃபிரிடி

ஷாகின் ஷா அஃபிரிடி

டி-20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் இவரது அசுர வேகப்பந்துவீச்சு தான். ஷாயின் ஷா ஆஃபிடியின் வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள அனைத்து அணி வீரர்களுமே தயங்குவார்கள். முதல் ஓவரில் இவர் விக்கெட் எடுத்தால் அந்தப் போட்டியில் அவரது அணி தோற்காது என்பது அஃபிரிடியின் மகிமையாக பார்க்கப்படுகிறது.

ஆசிஃப் அலி

ஆசிஃப் அலி

பாகிஸ்தான் அணியின் நடுவரிசை வீரரான ஆசிஃப் அலி, அதிரடியாக ஆடக்கூடியவர். ஆட்டத்தின் போக்கையே மாற்றக் கூடிய வீரர் என்பதால் இவருக்கு ஐ.பி.எல். அணிகளிடையே அதிக மவுசு இருக்கும். இதே போன்று சுழற்பந்துவீச்சாளர் ஷதாப் கான், ஃபகர் சமான் , முகமது ஹபீஸ் போன்ற வீரர்களுக்கு ஐ.பி.எல். தொடரில் அதிக மவுசு கிடைக்கும். நிற்க, பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்த பேச்சுக்கே இடமில்லை என்று பி.சி.சி.ஐ. கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, December 1, 2021, 20:10 [IST]
Other articles published on Dec 1, 2021
English summary
Top 5 PaKistan cricketers will attract crores in IPL Auction. Babar Azam, Rizwan will be the Favourite Picks For IPL Team. But chances are very very low as Government wont Permit
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X