For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா vs ஆஸி 2வது டி20 போட்டி.. 8 ஓவர்கள் ஆட்டமாக நடக்கும்.. நடுவர்கள் அறிவிப்பு!

நாக்பூர்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி நடைபெறும் நாக்பூர் மைதானத்தின் அவுட்ஃபீல்டில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், டாஸ் போட தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

Babar Azam - Mohammad Rizwan First Wicketற்கு 203 ரன்கள் அடித்து சாதனை!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நாக்பூரில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் டி20 தொடரில் ஆஸ்திரேலியா முதல் டி20 போட்டியில் இந்தியாவை தோற்கடித்தது.

இதன்மூலம் 1 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.

விராட் கோலிக்கு குறையாத ஆர்சிபி பாசம்.. மேக்ஸ்வெல்லை கண்டதும் நெகிழ்ச்சி.. ரசிகர்கள் உற்சாகம்! விராட் கோலிக்கு குறையாத ஆர்சிபி பாசம்.. மேக்ஸ்வெல்லை கண்டதும் நெகிழ்ச்சி.. ரசிகர்கள் உற்சாகம்!

டாஸ் தாமதம்

டாஸ் தாமதம்

அதே நேரத்தில் முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை இழக்காமல் இருப்பதற்கான முனைப்பில் களமிறங்குகிறது. மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், இரு அணிக்கும் இடையிலான போட்டி மைதானத்தின் தன்மையை ஆராய்ந்த பிறகே நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓவர்கள் குறைப்பு

ஓவர்கள் குறைப்பு

அதேபோல் கிட்டத்தட்ட ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளதால், ஆட்டத்தில் ஓவர்கள் குறைக்கப்பட அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதனால் ஆட்டத்தில் வெற்றிபெறுவதில் டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும்.

நடுவர்கள் ஆய்வு

நடுவர்கள் ஆய்வு

7 மணிக்கு கள நடுவர்களுடன் இணைந்து ஆட்ட நடுவர் மைதானத்தில் இருந்த அவுட்ஃபீல்டில் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போதும் ஈரப்பதம் குறையாததால், 8 மணிக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது மைதானத்தில் சில பகுதிகளில் ஈரப்பதம் குறையாமல் இருப்பதால், 8.45 மணிக்கு மீண்டும் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஈரப்பதம் அதிகமாக இருக்கும்பட்சத்தில், வீரர்களுக்கு காயம் ஏற்படும் என்பதால், நடுவர்கள் மீண்டும் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

5 ஓவர்கள் ஆட்டம்?

5 ஓவர்கள் ஆட்டம்?

இரவு 8.45 மணிக்கு நடுவர்களின் பரிசோதனையில் மைதானத்தின் ஈரப்பதம் குறைந்து காணப்பட்டால், போட்டியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் 5 ஓவர்கள் ஆட்டமாக நடத்துவதற்கு 9.45 மணிக்குள் தொடங்கப்பட வேண்டும். இதனால் ரசிகர்கள் அடுத்த ஆய்வுக்காக காத்திருக்கின்றனர்.

Story first published: Friday, September 23, 2022, 21:04 [IST]
Other articles published on Sep 23, 2022
English summary
Second T20 Match Between India vs Australia is Happening in Nagpur. Umpires Next Inspection is at 8.45PM. Also The cut-off time for a five-over game is 9.46.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X